Connect with us

Cinema History

பிரசாந்த் மட்டுமில்லை இந்த நடிகரும் அஜித், விஜய்யை விட டாப்பில் இருந்தாரு!.. பாவம் இறந்துட்டாரு!..

காதலர் தினம் படத்தை இப்போது பார்த்தாலும் அந்த படத்தை ஷங்கர் இயக்கினாரா? என்கிற கேள்வி தான் ரசிகர்களுக்கு வரும். அந்தளவுக்கு பிரம்மாண்டமான படமாக உருவாக்கியிருப்பார் இயக்குனர் கதிர். 1999ம் ஆண்டு வெளியான அந்த படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் தான் குணால்.

யாருடா இந்த பையன் முதல் படத்திலேயே இப்படியொரு பெரிய படத்தில் அதுவும் பாலிவுட் நடிகை சோனாலி பிந்த்ரேவுக்கு ஜோடியாக நடித்துள்ளாரே யாருடைய வாரிசு என்றெல்லாம் சினிமா வட்டாரத்தில் பேச ஆரம்பித்தனர்.

இதையும் படிங்க: ‘இந்தியன் 2’ க்கு பதிலாக ‘அந்நியன் 2’னு வச்சிருக்கலாம்! கிண்டலடித்த பிரபல இயக்குனர்

முதல் படமே அவருக்கு மிகப்பெரிய படமாக அமைந்தது. அன்றைய காலக்கட்டத்தில் விஜய், அஜித் உள்ளிட்ட நடிகர்களுக்கு கூட இப்படியொரு பிரம்மாண்டமான பெரிய படம் அமையவில்லை என்பது தான் நிதர்சனம்.

டைடல் பார்க் போன்ற செட்டப் எல்லாம் இப்போது போட்டு விடலாம். ஆனால், அன்றைய காலத்தில் அத்தனை கம்ப்யூட்டர்களை வைத்துக் கொண்டு இப்படியொரு இன்டர்நெட் கஃபே இருந்தால் எப்படி இருக்கும் என இளைஞர்களை வியக்க வைத்த படம் அது.

இதையும் படிங்க: என் நிலைமை மோசமா போச்சு.. கக்கூஸ் வேலைக்குக் கூட கூப்பிட மாட்றாங்க! புலம்பும் நடிகை

குணால் படத்தின் பாடல்கள் எல்லாம் மிகச் சிறப்பாக அமைந்த நிலையில், அவருக்கு எளிதில் ரசிகைகள் கூட்டம் அதிகரித்தது. சமீபத்தில், வெளியான மகாராஜா படத்தில் கூட என் தலைவன் குணால் கொடுத்த கண்ணாடி என ஒரு காட்சி வரும் போது உடனடியாக ரசிகர்களுக்கு குணால் பற்றிய நினைவுகளும் அவருடைய கனெக்‌ஷனும் நல்லாவே வொர்க்கவுட் ஆனது.

காதலர் தினம், பார்வை ஒன்றே போதுமே, புன்னகை தேசம், வருஷமெல்லாம் வசந்தம் என வரிசையாக இளைஞர்களை கவரும் படங்களை கொடுத்து வந்தார். மும்பையை சேர்ந்த இவர், இந்தி படமான யோகி படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போது 2008ம் ஆண்டு நடிகை லவினா பாட்டியா அபார்ட்மெண்டில் தூக்கில் தொங்கிய நிலையில், கண்டெடுக்கப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதையும் படிங்க: நெருப்புடா!.. நெருங்குடா பார்ப்போம் மோடுக்கு மாறிய சூர்யா!.. கங்குவா படத்தின் ஃபயர் அப்டேட்!..

google news
Continue Reading

More in Cinema History

To Top