ஏம்ம்மா ஏய்.. தெறிக்க விடும் குணசேகரன்.. ஒவ்வொரு சீனையும் ரசிக்க வைக்கும் எதிர் நீச்சல் குடும்பம்.. புது புது ட்விஸ்ட்?
பிரபல தொலைக் காட்சி தொடரான எதிர்நீச்சல் பற்றி பலரும் தெரிந்திருக்கலாம். இந்த சீரியலை பார்க்காத பலரும் கூட ஏம்மா ஏய் என்ற வசனத்தை கேட்டால் அது ஆதி குணசேகரன் என்னும் அளவுக்கு, சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் ஆகியுள்ளது.சமீபத்திய வாரங்களாகவே எதிர் நீச்சல் குடும்பத்தில் புதிய புதிய ட்விஸ்ட்களை கொடுத்து வரும் இயக்குனர், அவரே களத்தில் இறங்கி ஜீவானந்தம் என்ற பெயரில் குணரசேகரனுக்கு ஆட்டம் காட்ட தொடங்கியுள்ளார். .
பெண்களை வேறும் வீட்டு வேலை செய்யும் வேலைக்காரிகளாகவும் அடிமைகளாகவும் நடத்தும் ஆதி குணசேகரன், 40 சதவீத சொத்தை வைத்துள்ள தனது அப்பத்தாவிடம் இருந்து பறிக்க நினைக்கிறார். ஆனால் அதை ஜீவானந்தம், அப்பத்தா பட்டம்மாளிடம் இருந்து அவருக்கு தெரியாமல் கைரேகயை எடுத்து அவரின் பெயரில் மாற்றிக் கொள்கிறார்.
இதற்கிடையில் ஆதி குணசேகரனின் அலுவலகத்தையும் கையகப்படுத்தி கொள்கிறார். இந்த நிலையில் தான் ஆதி குணசேகரன் தனக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதாக ஒரு திறம்பட நாடகத்தை அரங்கேற்றம் செய்கிறார். அதில் அவருகு ஒரு கையும் வராமல் போனதாக குடும்பத்தினரிடம் நடித்துக் கொண்டுள்ளார். இதன் மூலம் தனது குடும்ப பெண்களை வைத்து சொத்துகளை திரும்ப பெற திட்டமிடுகிறார்.
இதற்கெல்லாம் துணை நிற்கும் தம்பி கதிரும் உடந்தை. ஆதி குணசேகரனும், கதிரும் இணைந்து சென்னை சென்று ஓய்வுபெற்ற காவல்துறை சார்ந்த ஒருவரின் உதவியுடன் ஜீவானந்தத்தை எதிர்கொள்ள திட்டமிடுகின்றனர். இது ஒரு புறம் எனில் மறுபுறம் இக்குடும்பத்தின் கடைசி மருமகள் ஜனனியோ ஜீவானந்தம் பற்றி முழு உண்மைகளை தெரிந்து கொள்ள மும்முரமாக தேடி அலைந்து வருகிறார்.
என்ன தான் நடந்தாலும் வாயை மூடிக் கொண்டு வீட்டு வேலை, சமையல் வேலை, கணவருக்கு அடிமை வேலை என இருந்து வந்த, ஆதி குணசேகரன் வீட்டு மருமகள்கள் தற்போது தான் ஒவ்வொருவராக வெளி வரத் தொடங்கியுள்ளனர். இது பார்க்கும் ரசிகர்களை மேலும் ரசிக்க தூண்டியுள்ளது.
இதையும் படிங்க: தயவு செய்து ‘ஜெய்லர்’ படத்தை பத்தி தப்பா எதுவும் பேசிறாதீங்க! தியேட்டரில் நடந்த அசாம்பாவிதம்
இதற்கிடையில் நேற்றைய எபிசோடில் வழக்கமாக வரும் ஆடிட்டருடன், வழக்கறிஞரும் ஆதி குணசேகரன் வீட்டிற்கு வருகிறார்கள். இருக்கும் ஆதாரங்களை திரட்டி, முதல் கட்டமாக ஜீவானந்தம் மீது வழக்கு தொடுக்க ஐடியா கொடுக்கிறார் வழக்கறிஞர். மறுபுறம் ஆதி குணசேகரனின் மனைவி ஈஸ்வரியும், அவரின் தந்தையும் அவர்களின் பூர்வீக கிராமத்தில் ஜீவானந்தம் பற்றி பேசிக் கொண்டுள்ளனர்.
மேலும் ஆதி குணசேகரன் உடல் நிலை சரியில்லாதவர் போல் நடிக்கிறாரோ என தெரிகிறது என ஈஸ்வரியின் தந்தை கூற, அப்படியே இருந்தாலும் கூட அடுத்தவரின் சொத்தை இப்படி பறிப்பது தவறுதானே என தனது சாந்தமான குரலில் ஈஸ்வரி கூறுகிறார். அப்போது அங்கு ஒரு கார் வந்து நிற்கிறது. அதிலிருந்து ஜீவானந்தமும் இறங்கி நடந்து வருகிறார். அது யார் என ஈஸ்வரியும் அவரின் தந்தையும் எதிர் நோக்கிறார்கள். இத்தோடு எபிசோடு முடிவடைந்துள்ளது.
இதற்கிடையில் வெளியான புரோமோவில் கதிர் கத்திக் கொண்டிருக்க, ஜனனி உங்களுக்கு என்ன வேண்டும் என்று கேட்க, அதற்கு 5 கோடி ரூபாய் பணம் வேண்டும் போய் எடுத்துட்டு வாங்க போங்க என கத்துகிறார். வழக்கம்போல தனது கிண்டலான பேச்சுடன் சொத்தெல்லாம் போக போதுன்னு இப்பவே கடன் கேக்குறீங்களா? என கேட்கிறார் கதிரின் மனைவி நந்தினி.
மறுபுறம் ஜீவானந்தம் ஈஸ்வரியை சந்திப்பது போலவும், அப்போது ஈஸ்வரி கோபமாக பேசுகிறார். அதற்கு ஜீவானந்தம் ஈஸ்வரிக்கு இப்படி எல்லாம் கோபமே வராது என்று கூறி, உங்கப்பா உங்களுக்கு குணசேகரனை கல்யாணம் பண்ணி வச்சுட்டாரு, அப்புறம் நீங்க அந்த பையனை நினைச்சுருக்க வாய்ப்பு இல்லை. அவன் பேர் ஜீவானந்தம் என கூறி விட்டு அங்கிருந்து செல்கிறார். இதை கேட்ட ஈஸ்வரி அழுது கொண்டிருக்கிறார்.
ஆக்சன் பிளாக், அடுத்தடுத்த பிரச்சனை, ஆதிரை கல்யாணம், ஆதி குணசேகரன் நெஞ்சுவலி என்று பரப்பரப்பாக ஒடிக் கொண்டிருக்கும் எதிர் நீச்சலில் இப்படி ஒரு காதலா? அதுவும் ஜீவானந்தம் ஈஸ்வரியின் காதலரா? ஈஸ்வரிக்காகத் தான் இதை செய்கிறாரா? இனி என்ன நடக்கும். ஈஸ்வரி – ஜீவானந்தம் இடையே என்ன உறவு? என பல கேள்விகள் ரசிகர்கள் மத்தியில் தொற்றிக் கொண்டுள்ளது.
இதையும் படிங்க: ஒல்லிக்குச்சி உடம்பா மாறிய குண்டான நடிகைகள்! வாய்ப்புக்காக பண்ணப் போய் இப்படி ஆயிடுச்சே
News source - Pugal Sekar