டிக்டாக் புகழ் ரவுடி பேபி சூர்யா மீது குண்டர் சட்டம்....இனிமேலாவது அடக்கி வாசிம்மா!...

by சிவா |
rowdy baby
X

டிக்டாக் ஆப் மூலம் நெட்டிசன்களிடம் பிரபலமானவர்கள் ஜி.பி.முத்து, ரவுடி பேபி சூர்யா மற்றும் இலக்கியா. டிக்டாக் ஆப் தடை செய்யப்பட்டு விட்டதால் மூவரும் யுடியூப்பில் வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர். இதில், ஆபாசமாக பேசுவதாக ஜி.பி.முத்து மீது ஏற்கனவே காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

சமூக வலைத்தளத்தில் பெண்களை ஆபாசமாகவும், இழிவாகவும் சித்தரித்து வீடியோ வெளியிட்டதாக கோவையை சேர்ந்த பெண் ஒருவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் சூர்யா மீதும் புகார் அளிக்கப்பட்டு அவர் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், சூர்யா மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. அவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க எஸ்.பி.பரிந்துரைப்படி கலெக்டர் சமீரன் உத்தரவிட்டார்.

Next Story