27 வருட ரசிகைக்கு மறக்க முடியாத அனுபவத்தை கொடுத்த ஆபிசர் ஆன் ட்யூட்டி ஹீரோ!.. மலையாள சேச்சன் மாஸ்!

#image_title
சமீபத்தில் வெளியான ஆபிஸர் ஆன் ட்யூட்டி என்ற மலையாளப் படம் பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்தது. இந்த படத்தின் ஹிரோ குஞ்சாக்கோ போபன் தொடர்ந்து பல வெற்றி படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் தற்போது அவர் கலந்துக்கொண்டிருந்த ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் அவரது ரசிகைக்காக அவர் செய்த செயல் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
சக்கொச்சன் என்று அழைக்கப்படும் குஞ்சாக்கோ போபன் 1981ம் ஆண்டு தன் தந்தை தயாரித்த தன்யா என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார். மலையாள திரையுலகில் அதிக வசூள் செய்த படங்களில் ஒன்றான இயக்குநர் ஃபாசில் இயக்கிய அனியாதிபிரவு படத்தில் நடிகை ஷாலினியுடன் இணைந்து நடித்து அறிமுகமானார். அதை தொடர்ந்து நட்சத்திரத்தாராட்டு, மயில்பீலிக்காவு, நிறம், பிரியம், தோஸ்த், கல்யாணராமன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

2005ம் ஆண்டு குஞ்சாக்கோ போபன் பிரியா ஆன் சாமுவேல் என்பவரை திருமணம் செய்துக்கொண்டார். இவர்களுக்கு ஐசக் என்ற ஒரு மகன் பிறந்தான். திருமணத்திற்கு பிறகு சில ஆண்டுகளாக சினிமாவை விட்டு விலகியிருந்த சக்கொச்சன் 2008ம் ஆண்டு மீண்டும் 20:20 படத்தில் ரீ எண்ட்ரி கொடுத்தார். அதை தொடர்ந்து மல்லு சிங், காதவீடு, விஷுதன் உள்ளிட்ட பல படங்களில் நடிக்க தொடங்கினார். சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான போகன்வில்லா மற்றும் ஆபிஸர் ஆன் ட்யூட்டி படங்கள் தொடர்ந்து ஹிட் கொடுத்து வருகிறது.
இந்நிலையில் தற்போது ஒரு படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட சக்கொச்சன் ரசிகை ஒருவர் தான் அவருடன் 1998ம் ஆண்டு அவருடன் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை அவரிடம் காமித்து மகிழ்ந்தார். அதை பார்த்த சாக்கோச்சன் அவருடைய போனிலும் அதை படம் பிடித்துக்கொண்டு, அந்த ரசிகையை மேடை மேல் அழைத்து அவருடன் மீண்டும் ஒரு செல்ஃபி புகைப்படம் எடுத்துக்கொண்டார். 27 வருடமாக ரசிகையாக இருந்த அவருக்கு சக்கொச்சன் கொடுத்த மறியாதை அனவரையும் நெகிழவைத்துள்ளது.