இவ்ளோதான் சம்பளம்.. இஷ்டம் இருந்தா நடி!...அஜித்தை அலறவிட்ட தயாரிப்பாளர்....
நடிகர் அஜித் தற்போது மாஸ் நடிகர், சினிமா விழாக்களில் கலந்து கொள்ளமாட்டார், யாரையும் சந்திக்க மாட்டர் என்பது எல்லாம் கடந்த சில வருடங்களாகத்தான். துவக்கத்தில் வாய்ப்பு தேடிய போது அவர் ஏறாத படக்கம்பெனி இல்லை. வாய்ப்பு கேட்காத இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் இல்லை. அவர் பணத்துக்காக சிரமப்பட்ட காலம் எல்லாம் இருந்தது. சம்பள விஷயத்தில் அவரை அலறவிட்ட ஒரு தயாரிப்பாளர் பற்றி தெரிந்து கொள்வோம்.
தமிழில் வசந்தகால பறவை, சூரியன், ஜென்டில்மேன், காதலன், காதல் தேசம், ரட்சகன் என பிரம்மாண்ட பட்ஜெட் கொண்ட படங்களை தயாரித்தவர் கே.டி.குஞ்சுமோன். அமராவதி படத்தின் மூலமாகத்தான் அஜித் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அந்த படத்திற்கு அவர் வாங்கிய சம்பளம் 30 ஆயிரம். அடுத்து, அவரை வைத்து குஞ்சுமோன் ஒரு படத்தை தயாரிப்பதாக இருந்தது.
அப்போது அவரை சந்தித்த அஜித் ‘எனக்கு 50 ஆயிரம் சம்பளம் கொடுங்கள்’ என கேட்டார். ஆனால், குஞ்சுமோனோ ‘உனக்கு 30 ஆயிரம்தான் கொடுப்பேன்’ எனக் கூற ‘சார் நான் போன படத்துக்கு 30 ஆயிரம் வாங்கினேன். அடுத்து 50 ஆயிரம் வாங்கினாத்தான என் மார்க்கெட் உயரும்’ என அஜித் கூறினார்.
இதனல், கோபமடைந்த குஞ்சுமோன் ‘30 ஆயிரம்தான் தருவேன். உனக்கு விருப்பம் இல்லனா நடிக்க வேண்டாம். வேறு ஒருத்தர வச்சு நான் படம் எடுப்பேன்’ எனக் கூற அதிர்ந்து போன அஜித் அங்கிருந்து வெளியேறினார். தற்போது வரை அவர் குஞ்சுமோன் தயாரிப்பில் நடிக்கவே இல்லை. இப்போது அவரின் சம்பளம் 60 கோடி வரை எகிறிவிட்டது.
தமிழ் சினிமா பல வருடங்களாகவே தயாரிப்பாளர்களின் கையில்தான் இருந்தது. எனவே, தயாரிப்பாளர்கள் கம்பீரமாக இருந்தார்கள். நடிகர்களிடம் கறாராக பேசுவார்கள். ஹீரோக்களும் தயாரிப்பாளர்கள் சொல்வதை கேட்பார்கள். ஆனால், இப்போது சினிமா ஹீரோக்களின் கைகளுக்கு மாறிவிட்டது. எனவே, தயாரிப்பாளர்கள் அடக்கி வாசிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆனாலும், சில தயாரிப்பாளர்கள் இப்போதும் அதே கம்பீரமாகத்தான் இருக்கிறார்கள். அதில் ஒருவர்தான் குஞ்சுமோன்.
பல வருடங்கள் கழித்து ஜென்டில்மேன் 2 படத்தை குஞ்சுமோன் தயாரிக்கவுள்ளார். இது தொடர்பான செய்தி சமீபத்தில் வெளியானது குறிப்பிடத்தக்கது.