
Cinema News
நீண்ட வருடத்திற்கு பின் இறங்கி ஆடிய அதர்வா.. குருதி ஆட்டம் தாண்டவமா.? தடுமாற்றமா.? விமர்சனம் இதோ…
நடிகர் அதர்வா நடிப்பில் வெளியான இமைக்கா நொடிகள், 100 ஆகிய திரைப்படங்கள் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், அடுத்து கடைசியாக சில வருடங்களில் மிகப்பெரிய படங்கள் எதுவும் கை கொடுக்காத நிலையில் தற்போது குருதி ஆட்டம் மூலம் களமிறங்கியுள்ளார். இப்படத்தை இயக்குனர் ஸ்ரீ கணேஷ் என்பவர் இயக்கியள்ளார். இதற்கு முன்பு இவர் “எட்டு தோட்டாக்கள்” எனும் ஒரு நல்ல படத்தையும் கொடுத்ததால், ரசிகர்கள் மத்தியில் குருதி ஆட்டம் படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு இருந்தது.
அதற்கேற்றார் போல இப்படத்தின் யுவன் சங்கர் ராஜாவின் பாடல்களும் படத்தின் டிரைலரும் ரசிகர்களை கவர்ந்தது. உண்மையில், அது படத்திற்கு இன்று நல்ல ஓப்பனிங் கிடைக்க பெரிதும் உதவியது. அந்த ஓப்பனிங் குருதி ஆட்டம் தக்க வைத்ததா..? அல்லது தவறவிட்டதா..? என்பதை இந்த விமர்சனத்தில் பார்க்கலாம்.
குருதி ஆட்டம் எனும் பெயருக்கு ஏற்றார் போல படம் முழுக்க ரத்தம் நிறைந்து வழிகிறது. படத்தில் மதுரை மையமாக இருக்கிறது . அந்த மதுரையில் பெரிய ரவுடியாக ராதிகா, ராதாரவி ஆகியோர் இருக்கிறார்கள். இதில் ராதிகா தான் அங்கு மிகப் பெரிய பெண் தாதா. வழக்கம்போல, மிகவும் நல்ல குணம் கொண்ட ஹீரோவாக அதர்வா, பிரியா பவானிசங்கரை பார்த்தவுடன் காதலித்து விடுகிறார். அவரும் அதர்வாவை பார்த்ததும் காதலின் விழுந்து விடுகிறார்.
அதன் பிறகு வில்லன் கும்பலோடு சிறு உரசல் இதனால் ஏற்படும் சண்டையில் ஹீரோ மாட்டிக்கொள்ள பிறகு எப்படி அதிலிருந்து மீண்டு வந்தார். இரண்டு வில்லன் குரூப்புகளுக்கு இடையில் அதர்வா எப்படி தப்பித்தார் என்பதே இரத்தம் தெறிக்க தெறிக்க கூறியிருக்கும் திரைப்படம் தான் “குருதி ஆட்டம்”.
இதையும் படியுங்களேன்- விருமன் நாயகிக்கு மறைமுக தாக்குதல்.? இணையத்தில் கொந்தளித்த இளம் நடிகை.! பின்னணி சம்பவம் இதோ…
படத்தில் நடித்திருந்த அனைவருமே நல்லவிதமாக நடித்திருந்ததால் அனைவரும் ரசிகர்கள் மத்தியில் மனதில் நின்று விட்டனர். குறிப்பாக அதர்வாவின் நண்பராக வரும் ஸ்ரீ கணேஷ், ரௌடியாக வரும் வித்யா பாலன் ஆகியோர் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளனர்.
ஆக்சன் காட்சிகளுக்கு ஏற்ப இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா நல்ல பின்னணி இசை கொடுத்து இருக்கிறார். முதல் பாதி விறுவிறுப்பாக செல்கிறது. இடைவேளை வரை எந்தவித சலனமும் இல்லாமல் கதை நகர்கிறது. பிற்பகுதி முதல் பாதியை ஒப்பிடுகையில் கொஞ்சம் சுமாராக தான் இருக்கிறது. இறுதியில் எதிர்பார்த்தது போலவே ஹீரோ வெற்றி பெற்று தப்பித்து விடுகிறார்.
இயக்குனர் ஸ்ரீ கணேஷ் முதல் படமான எட்டு தோட்டாக்கள் படத்தில் மிகவும் எதார்த்தமான கதைகளத்தை கொண்டு மக்களை கவர்ந்தார். ஆனால் இதில் முழுக்க முழுக்க ரத்தம் பெருக்கி தெறிக்க மதுரையை மையமாகக் கொண்ட கதையில் பலவிதமான லாஜிக் மீறல்கள் அதிலும் போலீஸ் எங்கே என்று தேடும் அளவிற்கு இருக்கிறார்கள் என்பது போல காட்டப்பட்டுள்ளது. படத்தின் திரைக்கதை நம்பும் படி இல்லாமல் இருந்தாலும் அதனை எல்லாம் மறக்கடிக்கும் அளவிற்கு சண்டை காட்சிகள் பரபரப்பான அடுத்த கட்ட நகர் போல் இருந்தது படம் தப்பித்தது என்று கூறலாம்.
படத்தில் அஜித்தின் விஸ்வாசம் முதல் நாள் முதல் காட்சியை அதர்வா பார்ப்பது போல காட்டப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, சில காட்சிகளில் அஜித்தின் பேனர்களும் வருகிறது. இதனால் படம் தொடங்கும் போதே அஜித் ரசிகர்களுக்கு நன்றி என படக்குழு படத்திலே தெரிவித்துள்ளது.