Connect with us

நடிகைகைளின் எண்ணமே வேற…! நான் அப்படி இல்ல…! அடக்க ஒடுக்கமா பேசும் குஷ்பு

kush_main_cine

Cinema News

நடிகைகைளின் எண்ணமே வேற…! நான் அப்படி இல்ல…! அடக்க ஒடுக்கமா பேசும் குஷ்பு

80, 90 களில் வடமாநிலத்தில் இருந்து வந்து தமிழ் சினிமாவில் றெக்க கட்டி பிறந்தவர் நடிகை குஷ்பு. ஆரம்பத்தில் தமிழே தெரியாமல் அப்படி இருந்தும் ரசிகர்கள் மனதில் ஆழமாக பதிந்தவர். ரஜினி,கமல் சரத்குமார், விஜயகாந்த்,பிரபு போன்ற முன்னனி நடிகர்களுடன் ஆட்டம் போட்டு ரசிகர்களையும் கிறங்கடித்தவர்.

kush1_cine

ஏராளமான ரசிகர்களை உருவாக்கி தனக்கென கோயில் கட்டும் அளவுக்கு ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கியவர். நடிகைகளுக்காக கோயில் இருக்கிறது என்றால் அது இவருக்கு மட்டும் தான். சினிமாவில் கிட்டத்தட்ட 200 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம், ஹிந்தி போன்ற மொழி படங்களிலும் நடித்துள்ளார்.

kush2_cine

இவர் இயக்குனரும் நடிகருமான சுந்தர்.சி யை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். திருமணத்திற்கு பிறகும் ஒரு சில படங்களில் நடித்தார். அண்மையில் வெளிவந்த ரஜினி நடித்த அண்ணாத்த படத்திலும் நடித்தார். மேலும் அரசியலிலும் தீவிரம் காட்டி வருகிறார். இந்த நிலையில் அவரிடம் ஒரு பேட்டியில் தற்போது உள்ள நடிகைகள் மும்பையில் இருந்து வருகிறார்கள், இரண்டு மூன்று படங்கள் நடிக்கிறார்கள், திரும்பவும் மும்பை பக்கமே சென்று விடுகிறார்கள், நிலையான இடத்தை தக்க வைத்துக் கொள்ள முடியவில்லை அவர்களால்.

kush3_cine

ஆனால் நீங்கள் அப்படி இல்லை , நீங்களும் அங்கு இருந்து தான் வந்தீங்க, இங்கேயே ஒரு சிம்மாசனம் போட்டு அமர்ந்து விட்டீர்கள் என கேட்க, அதற்கு குஷ்பு தற்போது உள்ள நடிகைகள் வரும் போதே ஒரு மைண்ட்செட்டில் வருகிறார்கள், மூன்று படங்களில் நடித்தால் போதும் என எண்ணியே வருகிறார்கள், ஹிந்தியில் இரண்டு படங்களில் நடித்தால் போதும் அவர்களின் மார்க்கெட்டே வேற, அதனால் தமிழ் சினிமாவை ஒரு படிக்கட்டு போலதான் அவர்களுக்கு மாறுகிறது. ஆனால் நான் அப்படி இல்லை, வந்தேன், இங்கேயே செட்டிலாகி விட்டேன். என்னோட மைண்ட்செட் இப்படி என கூறினார்.

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top