வெயிட்ட குறைச்சது வீண்போகல... ஹீரோயின் வாய்ப்பை தட்டி தூக்கிய மூத்த நடிகை...!
தமிழ் சினிமாவில் 80 மற்றும் 90 களில் ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்த நடிகை தான் குஷ்பூ. இவருக்கு ஒரு மிகப்பெரிய வெறித்தனமான ரசிகர் பட்டாளமே இருந்தது. எந்த அளவிற்கு என்றால் குஷ்புவிற்கு கோவில் கட்டும் அளவிற்கு வெறித்தனமான ரசிகர்கள் இருந்தனர். இப்படி ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக வலம் வந்த குஷ்பு பார்க்க சற்று பப்ளியாக இருப்பார்.
ஒல்லியான நடிகைகள் மட்டுமே சாதிக்க முடியும் என்ற எண்ணத்தை மாற்றி சற்று பப்ளிமாஸ் போல இருந்தாலும் ஹீரோயினாக திரையில் ஜொலிக்க முடியும் என்று நிரூபித்தவர் தான் குஷ்பு. இப்படி பிரபல நடிகையாக வலம் வந்த குஷ்பு இயக்குனர் சுந்தர் சி யை திருமணம் செய்து கொண்டு செட்டிலானார்.
திருமணத்திற்கு பின்பும் படங்களில் குணச்சித்திர வேடங்களில் குஷ்பு நடித்து வந்தாலும் முன்பைவிட சற்று வெயிட் போட்டு குண்டாக இருந்தார். இதனால் உருவ கேலிக்கும் ஆளானார். இந்நிலையில் சமீபகாலமாக கடின உடற்பயிற்சி செய்து உடல் எடையை குறைத்து அந்த புகைப்படங்களை குஷ்பு சோசியல் மீடியாவில் பதிவிட்டிருந்தார்.
இதனை கண்ட ரசிகர்கள் முதல் படத்தில் பார்த்த மாதிரி இருக்கீங்க. இப்போ கூட நீங்க ஹீரோயினா நடிக்கலாம் என கமெண்ட் செய்து வந்தனர். தற்போது அவர்களின் வாக்கு பலித்துவிட்டது. ஆம் அவர்கள் கூறியதுபோல் குஷ்பு புதிய படம் ஒன்றில் 80'ஸ் நாயகன் ஒருவருக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.
அதன்படி கிட்டத்தட்ட 13 ஆண்டுகளுக்கு பின்னர் தமிழ் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுக்கும் நடிகர் மைக் மோகன் தற்போது ஹரா என்ற படத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தை தாதா 87, பவுடர், பப்ஜி போன்ற படங்களை இயக்கிய விஜய் ஸ்ரீ இயக்க உள்ளார். இந்த படத்தில் தான் மோகனுக்கு ஜோடியாக நடிகை குஷ்பு நடிக்க உள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
இவர்கள் இருவரும் ஏற்கனவே கடந்த 1988ஆம் ஆண்டு வெளியான ஆத்ம கதா என்கிற தெலுங்கு படத்தில் ஜோடியாக நடித்திருந்தாலும், தமிழில் இருவரும் ஜோடியாக நடிப்பது இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.