‘வருஷம் 16′ குஷ்பூவை அப்படியே ஞாபகப்படுத்தும் மகள்… சினிமா என்ட்ரி கன்பார்ம்!

தமிழ் சினிமா தவிர்க்க முடியாத நடிகைகளுள் ஒருவர் குஷ்பூ. ரஜினி, கமல் தமிழ் சினிமாவின் முக்கால்வாசி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். பின்னர் இயக்குனர் சுந்தர் சியை திருமணம் செய்து செட்டில் ஆனாலும், அவ்வப்போது கிடைக்கும் வாய்ப்புகளில் படங்களில் நடித்து வருகிறார். மேலும் தீவிர அரசியலிலும் ஈடுபட்டு வருகிறார். குஷ்பூ - சுந்தர்சி இரண்டு மகள்கள். இவர்களில் இவரின் மூத்த மகள் அவந்திகா சுந்தர் தனது சினிமா என்ட்ரியை அறிவித்துள்ளார். இவரின் சினிமா என்ட்ரி தான் தமிழ் சினிமாவில் இந்த வாரத்தின் ஹாட் நியூஸ்.
முன்பு உடல் எடை அதிகரித்து இருந்த அவந்திகா தற்போது எடை குறைந்து பார்ப்பதற்கு ‘வருஷம் 16′ குஷ்பூவை அப்படியே ஞாபகப்படுத்துகிறார். அவந்திகா தனது சினிமா என்ட்ரி குறித்து பேசியுள்ளார். அதில், "நான் சினிமாவில் நடிக்கப் போவதாக அம்மாவிடம் முதன்முதலில் சொன்னபோது, அவங்க ஆதரவு தந்தாங்க.
ஆனால், "சினிமாவில் இருக்கறது சாதாரண விஷயம் கிடையாது. கடினமான இடம், பார்த்துக்கோ"ன்னு கூறினாங்க. சில வருடங்களுக்கு முன்னால் லண்டனுக்கு படிக்கப் போனேன். திரும்பி வந்த நேரத்தில் கொரோனா ஆரம்பித்தது. அந்த காலம் எல்லோருக்கும் பெரும் திருப்பமாக இருந்தது. அப்போது சினிமாவில் நடிக்கலாம்னு முடிவு பண்ணேன். ஆனால் அப்போ கொஞ்சம் குண்டா இருந்தேன், உடம்பை ஸ்லிம்மாக வைக்கவில்லை. பிறகு நிறைய முயன்று உடம்பை ஸ்லிம்மாக கொண்டு வந்தேன்.

மறுபடியும் லண்டன் போய் ஆறு மாதங்கள் டிராமா ஸ்கூலில் சேர்ந்து நடிப்பு பற்றி படிச்சேன். இப்போது சினிமாவை மிகவும் சீரியஸாக எடுத்துக்கொண்டு வருகிறேன். சினிமாவுக்கு வருவதால் என்னை அம்மாவோடு நிச்சயம் ஒப்பிடுவாங்க. அம்மா மிகப்பெரிய ஆர்ட்டிஸ்ட்.
இதையெல்லாம் எதிர்கொள்ளவேண்டும். இயல்பாகவே வாரிசுகள் எல்லோருக்கும் அப்படி ஒரு சூழல் ஏற்படும். அம்மாவின் ஜீன் என்கிட்ட இருக்கு. அப்பா படங்களுக்கு உழைப்பதை பார்த்ததாலும், அவரோட கூடவே இருந்ததாலும் எனக்கு சினிமாவில் நல்ல இடத்திற்கு வர முடியும் என நம்புகிறேன்.
சினிமாவில் நடிக்க வேண்டும் என்பது என் சொந்த முடிவு. இதில் அப்பாவோ அம்மாவோ எனக்கு எந்தப் பிரஷரும் கொடுக்கவில்லை. அவர்கள் எனக்கு முழு சுதந்திரம் கொடுத்து வளர்த்திருக்காங்க. எங்களுடைய எண்ணங்களுக்கு ஒரு நாளும் அவங்க குறுக்கே இருந்து இல்லை. அம்மாவிடம் சினிமாவில் நடிப்பதாக சொன்னதும் உன்னால் முடிந்ததை சிறப்பா பண்ணுனு சொன்னாங்க. அதுதான் அவங்க.
நான் சினிமா என்ட்ரி கொடுப்பதற்கான வேலைகள் நடக்குது. நல்ல கதைகள் கேட்டுக்கிட்டே இருக்கேன். இன்னும் எந்தப் புராஜெக்ட்டில் அறிமுகமாகப் போகிறோம் என்று முடிவு செய்யவில்லை." என்று கூறியுள்ளார்.