பேசாம நீங்களே கல்யாணம் பண்ணியிருக்கலாம்!.. குஷ்புவிடம் வேதனையை சொல்லி புலம்பிய பிரபல நடிகரின் மனைவி..
தமிழ் சினிமாவில் 80களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி 90களில் ஒரு முன்னனி நடிகையாக வலம் வந்தார் நடிகை குஷ்பு. வருஷம் 16 படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் குஷ்பு. தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம் போன்ற மொழிப் படங்களிலும் நடித்து முன்னனி நடிகையாக உச்சம் பெற்றார் குஷ்பு.
திரையில் குஷ்புவை நடிகர் பிரபுவுடன் தான் சேர்த்து வைத்து ரசித்தார்கள். அந்த அளவுக்கு இருவருக்கும் இடையில் கெமிஸ்ட்ரி வேலை செய்தது. ஆனால் குஷ்பு அவருக்கு பிடித்த நடிகராக கமலை கூறியிருக்கிறார். எல்லா நடிகர்களுடனும் சேர்ந்து நடித்திருக்கிறேன். ஆனால் கமலை பார்த்தால் மட்டும் கூடுதல் பாசம் இருக்கும்.
இதையும் படிங்க : புரட்சித்தலைவர் எம்ஜிஆர் மக்களின் மனதில் நீங்கா இடம்பிடிக்க இதுதான் காரணம்…!
அந்த அளவுக்கு கமல் மீது மரியாதை கலந்த பிரியம் உண்டு எனக் கூறியிருக்கிறார். இதுமட்டுமில்லாமல் ஹிந்தியில் பிரபல நடிகராக வலம் வந்த கோவிந்தாவை மிகவும் பிடிக்குமாம் குஷ்புவுக்கு.சொல்லப்போனால் கோவிந்தா மீது ஒரு தனி கிரஷ் இருந்து வந்திருக்கிறதாம்.
குஷ்புவும் கோவிந்தாவும் ஒன்றாக ஒரே நேரத்தில் சினிமாவில் நுழைந்தவர்கள். இருவரும் சேர்ந்து படத்தில் நடித்திருக்கிறார்கள்.மேலும் அந்த நேரத்தில் கோவிந்தாவுடன் ஒரே காரில் பயணிப்பது, ஒன்றாக சூட்டிங் போவது என நெருக்கமான நட்புறவுடன் இருந்திருக்கிறார். அதனால் இப்பொழுதும் கோவிந்தாவின் மனைவி குஷ்புவை பார்த்தாலும் கேட்பாராம்.
பேசாமல் நீங்களே கல்யாணம் பண்ணியிருக்கலாம். இவர் தொல்லை தாங்க முடியலைனு குஷ்புவிடம் சொல்லுவாராம்.இதை ஒரு பேட்டியில் குஷ்புவே தெரிவித்தார்.