உதவி செய்த குஷ்பு!.. காதலை சொன்ன ஆர்த்தி!.. சிங்கப்பூரில் நடந்தது என்ன?...
Kushboo: தமிழ் சினிமாவில் தற்போது அடுத்த சர்ச்சையை கிளப்பியிருக்கிறது இன்னொரு விவாகரத்து செய்தி தான். எப்போதும் போல ஜெயம் ரவி தன்னுடைய விவாகரத்து அறிக்கையை வெளியிட ரசிகர்கள் அதிர்ந்தனர். ஆனால் அடுத்த நாளில் அவருடைய மனைவி ஆர்த்தி இந்த விவாகரத்தில் எனக்கு சம்மதம் இல்லை என அறிக்கையை வெளியிட்டு ரசிகர்களிடம் அதிர்ச்சியை உண்டாக்கினார்.
பொதுவாக பிரபலங்கள் விவாகரத்தை அறிவிக்கும் போது இருவரும் ஒரே போல ஒரு அறிக்கையை தயார் செய்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு முடித்துக் கொள்வார்கள். ஆனால் ரவி விஷயத்தில் அப்படி நடக்கவில்லை. அவர் ஒரு அறிக்கையை வெளியிட ஆர்த்தி வெளியிட்டது அதற்கு நேர்மாறாக அமைந்தது.
இதையும் படிங்க: அவங்களுக்கு மட்டும் தனி சட்டமா?… சர்ச்சையில் சிக்கிய பிக்பாஸ்!
இந்நிலையில் இவர்களுடைய காதல் குறித்த தகவல் தற்போது இணையத்தில் கசிந்து இருக்கிறது. ஜெயம் ரவியை முதலில் காதலிக்க தொடங்கியது ஆர்த்தி தான். அவருடைய குடும்பம் பிரபல தயாரிப்பாளர் குடும்பம் என்பதால் நடிகைகளுடன் ஆர்த்திக்கு சாதாரணமாகவே ஒரு நட்பு இருந்தது.
அந்த சமயத்தில் நடிகைகள் இணைந்து சிங்கப்பூருக்கு டூர் சென்று இருக்கின்றனர். அவர்களுடன் ஆர்த்தியும் இணைந்து கொண்டதாக கூறப்படுகிறது. அங்கு தான் முதன் முதலில் நேராக ஜெயம் ரவியை பார்த்திருக்கிறார் ஆர்த்தி. அவர் மீதான காதலை நடிகை குஷ்புவிடம் கூற அவர் இதற்கு முழு ஆதரவு தெரிவித்ததாக கூறப்படுகிறது.
வெளியில் சுற்றி பார்க்க நடிகைகள் செல்லும்போது ரவி ரூமில் இருந்திருக்கிறார். அந்த நேரத்தை பயன்படுத்திக் கொண்ட ஆர்த்தி தானும் இங்கே இருக்கிறேன் என கூறிவிட்டு ரவியிடம் தன்னுடைய காதலை கூறியதாக கூறப்படுகிறது. உடனே சம்மதிக்காத ரவி சிறிது நாட்கள் கழித்து அதற்கு ஒப்பு கொண்டிருக்கிறார்.
இதையும் படிங்க: நேரா கோர்ட்டுக்குதான் வருவேன்!.. வந்தா என்னை கடத்திடுவாங்க!.. ஜெயம் ரவி உயிருக்கு ஆபத்தா?..
தன் மகன்களை பக்கத்தில் வைத்து பார்த்துக் கொள்ள வேண்டும் என நினைத்த எடிட்டர் மோகன் ஒரே இடத்தில் தனித்தனி வீடுகளில் தங்க வைத்திருக்கிறார். இருந்தும் திருமணத்திற்கு பின்னர் மூன்றே மாதத்தில் ரவியை பிரித்து தனியாக ஆர்த்தி அழைத்து சென்றதாகவும் கூறப்படுகிறது.
தொடக்கத்தில் இருந்தே ரவியை தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ளவே ஆர்த்தி விரும்பினாராம். அதனால் தான் தனி ஒருவன் 2 படத்திற்கு கூட கால்சீட்டை ஒதுக்க முடியாத நிலையில் இருக்கிறார் ரவி. குடும்பத்திற்கு செல்ல பிள்ளையாக வளர்ந்த ரவி தனிமையில் தவிக்க அவருடைய மன அழுத்தமே இந்த விவாகரத்திற்கு காரணமாக முடிந்ததாகவும் கூறப்படுகிறது.