நம்ம குஷ்புவா இது ? - க்ளாமர் ஏத்தும் புகைப்படங்களை வெளியிட்ட குஷ்பு
தமிழ் சினிமாவில் 80ஸ் காலக்கட்டம் முதலே பெரிய ரசிக பட்டாளத்தை கொண்டுள்ள முக்கியமான நடிகை குஷ்பு. தமிழில் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளிலும் நடித்துள்ளார்.
1990 களில் மிகவும் பிரபலமாக இருந்த நடிகை குஷ்பு, பிறகு சில காரணங்களால் திரைத்துறையை விட்டு விலகிவிட்டார். மேலும் அவரது உடல் எடை அதிகரிப்பு காரணமாகவும் அவரால் சினிமா துறையில் தனது பணியை தொடரமுடியவில்லை.
பிறகு திரைத்துறையில் பெரியார், அரண்மனை 2 போன்ற திரைப்படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். இறுதியாக அண்ணாத்த திரைப்படத்தில் நடித்திருந்தார். அதிலும் கூட உடல் பருமனாகவே காணப்பட்ட குஷ்பு சில நாட்களாக உடல் எடையை குறைக்கும் வேலையில் இறங்கியிருந்தார் குஷ்பு.
சமூக வலைத்தளங்களில் அடிக்கடி உடல் எடை குறைப்பு பற்றிய அப்டேட்களை விட்டு வந்த குஷ்பு. தற்சமயம் லண்டனில் எடுத்த போட்டோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் அசாத்தியமான அளவில் உடல் எடையை குறைத்திருப்பது தெரிகிறது.
பழைய படங்களில் உள்ள குஷ்பு போலவே மீண்டும் மாடர்ன் உடையில் தன்னை வெளிப்படுத்தியுள்ளார். இதனால் மீண்டும் திரைத்துறையில் குஷ்பு முக்கிய இடத்தை பிடிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதாக ரசிகர் வட்டாரத்தில் பேச்சுக்கள் உள்ளன.
தற்சமயம் இந்த புகைப்படம் ட்ரெண்டிங் ஆகி வருகிறது.