இதெல்லாம் உனக்கு தேவையா? ரஜினி சொன்ன வார்த்தை.. அசிங்கப்பட்ட குஷ்பு

rajini_kushboo
Rajini: தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட 50 ஆண்டுகாலமாக சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தோடு மக்கள் மனதில் நீடித்து இருப்பவர் நடிகர் ரஜினிகாந்த். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரும் விரும்பும் நடிகராகவே வாழ்ந்து வருகிறார். இவருடைய படங்களை பார்ப்பதற்கு இளைஞர்கள் முதல் ஃபேமிலி ஆடியன்ஸ் வரை அனைவரும் மகிழ்ச்சியாக வருவதை பார்க்க முடிகிறது.
பாக்ஸ் ஆஃபிஸ் கிங்காகவும் ரஜினிதான் இருந்து வருகிறார். அடுத்த தலைமுறை நடிகர்கள் பல பேர் வந்தாலும் இவர்தான் டாப் நடிகராக பாக்ஸ் ஆஃபிஸில் திகழ்ந்து வருகிறார். இவருடைய படங்களுக்குத்தான் இன்று வரை நல்ல ஒரு ஓப்பனிங் இருந்து வருகிறது. தற்போது ரஜினி லோகேஷ் இயக்கத்தில் கூலி படத்தில் நடித்து முடித்து அடுத்ததாக நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் 2 படத்தில் நடித்து வருகிறார்.
ஜெயிலர் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு கோவை மாவட்டத்தை சுற்றியிருக்கும் இடங்களில் படமாக்கப்பட்டு வருகிறது. அங்குள்ள மக்கள் ரஜினியை பார்க்க ஆர்வமாக இருப்பதை பல வீடியோக்களில் பார்க்க முடிகிறது. ரஜினியும் படப்பிடிப்பை முடித்துவிட்டு திரும்பு போது காரில் நின்றவாறு கையசைத்த படி மக்களை சந்தித்து விட்டு செல்கிறார். என்னதான் சூப்பர் ஸ்டார் என்ற ஒரு பெருமை இருந்தாலும் அதை இன்றுவரை தன் தலைக்கு கொண்டு போகாமல் மிகவும் எளிமையாக இருப்பதையும் பார்க்கிறோம்.
அதே போல் மற்ற டாப் நடிகர்கள் விமான நிலையத்திற்கு வரும் போது யாரையும் சந்திக்காமல் முகத்தை மறைத்தவாறு செல்கிறார்கள். ஆனால் ரஜினி அப்படி எதுவும் பண்ணாமல் சாதாரண மனிதராக வந்து எல்லாரிடமும் சகஜமாக பேசிவிட்டுத்தான் செல்கிறார். இந்த நிலையில் நடிகை குஷ்பூ ரஜினியை பற்றி ஒரு தகவலை பகிர்ந்தார். ஏவிஎம் ஸ்டூடியோவில் ஒரு சமயம் ரியாலிட்டி ஷோ நடந்து கொண்டிருந்ததாம். அதில் குஷ்பூவும் இருந்தாராம்.

அதே ஏவிஎம்மில் ரஜினியின் ஒரு படத்தின் பேட்ச் வொர்க் நடந்து கொண்டிருந்ததாம். சரியான வெயில் நேரமாம். ஆனால் ரஜினி வெளியில் ஒரு சேர் போட்டு அவரே குடை பிடித்தவாறு புத்தகம் படித்துக் கொண்டிருந்தாராம். இவரை பார்த்ததும் குஷ்பூ நேராக ரஜினி அருகில் வந்து பேசிக் கொண்டிருந்தாராம். ‘பேட்ச் வொர்க் தானே நடக்குது. நீங்க போய் கேரவனில் உட்காரலாமே’ என குஷ்பூ சொல்லியிருக்கிறார்.
உடனே ரஜினி ‘கேரவன் இல்ல. அங்க தூரத்துல ஒரு காட்டேஜ் இருக்கு. ஆனா அங்க போனா இவங்க கூப்பிடும் போது சரியான நேரத்துல வர முடியாது. வருவதற்கு 15 நிமிஷம் ஆகும். அதான் இங்கேயே உட்கார்ந்து விடலாம்னு இருக்கேன். நம்மலாள எதுக்கு நேரத்த வேஸ்ட் பண்ணனும்’என ரஜினி சொன்னதும் குஷ்பூவுக்கு வெட்காம போச்சாம். ஏனெனில் குஷ்பூ உட்பட எல்லாரும் இப்போ கேரவன் தான் பயன்படுத்துறாங்க.
எப்பேற்பட்ட சூப்பர் ஸ்டார். அவரே இந்த மாதிரி யோசிக்கும் போது ஏன் நமக்கு மட்டும் இப்படி யோசனை வரல. இவர்கிட்ட இன்னும் கத்துக்க வேண்டியது நிறைய இருக்கு என குஷ்பூ ஒரு பேட்டியில் கூறினார்.