தோளுக்கு மேல வளர்ந்த புள்ளைங்க முன்னாடி குஷ்பு-சுந்தர்.சி பண்ணும் அட்டகாசம்..! தாங்க முடியாம மகள் பண்ண காரியத்தை பாருங்க..
சுந்தர்.சி இயக்கத்தில் ஜெயராமன், கவுண்டமணி, குஷ்பு, மனோரமா நடித்த படம் தான் முறைமாமன். இந்த படத்தில் நடித்ததன் மூலம் தான் சுந்தர்.சிக்கும் குஷ்புவுக்கும் இடையே காதல் மலர்ந்தது. கிட்டத்தட்ட 5 வருடங்கள் காதலித்து 2000 ஆம் ஆண்டு இவர்கள் திருமணம் செய்து கொண்டனர்.
22 வருட திருமண வாழ்க்கையில் இவர்களின் ரொமான்ஸ் ரகசியத்தை நம்மிடையே பகிர்ந்துள்ளார் குஷ்புவின் மகள். திருமணத்திற்கு முன்னாடி எப்படி காதலித்து வந்தார்களோ அதே நிலையில் தான் இப்பொழுதும் இருக்கிறார்கள். வெளியூர் சூட் போனாலும் இரண்ட் பேரும் நைட் வீடியோகால் பேசாமால் இருக்க மாட்டார்கள்.
அப்பாகிட்ட இருந்து போன் வந்ததும் அம்மாவுக்கு எல்லையில்லா மகிழ்ச்சி தரும் வகையில் சந்தோஷப்படுவார், மேலும் பேசும் போது அம்மா குழைஞ்சு குழைஞ்சு பேசுறத பாக்கனுமே! சொல்லுங்க மாமா, மாமானு கூப்பிட்டு உசுர கொடுப்பாங்க என கூறினார்.
மேலும் போன் வைக்கும் போதும் நீங்க் வையுங்கனு அம்மா சொல்ல நீ வையுனு அந்த பக்கம் அப்பா சொல்ல தாங்க முடியாது. நான் கடுப்பாகி போன வாங்கி அப்பா நான் வைக்கிறேனு சொல்லி கட் பண்ணிடுவேன். மறுபடியும் அம்மா போன் பண்ணி ஹனி கட் பண்ணிட்டானு சொல்லி மீண்டும் முதல்ல இருந்து ஆரம்பிப்பாங்க என தன்னுடைய நகைச்சுவை கலந்த ஆதங்கத்தை வெளிப்படுத்தினார் குஷ்புவின் மூத்த மகள்.