Categories: latest news

இப்போதும் அந்தப் பழக்கத்தை விடாத ரஜினி.. குஷ்பு சொன்ன செம அப்டேட்..!!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகிவரும் திரைப்படம் தான் அண்ணாத்த. விறுவிறுப்பாக நடைபெற்றுவந்த அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து படம் தீபாவளிக்கு திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் ரஜினியுடன், மீனா, குஷ்பூ, நயன்தாரா ஆகியோர் முக்கியமான பாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். இப்படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் ரஜினியின் தங்கையாக நடித்து வருகிறார். இவர் ரஜினியுடன் முதன் முறையாக நடிக்கும் படம் இதுவாகும்.

இதையும் படிங்க: தனுஷால 3 வருஷம் வீணாப்போச்சு…..சிவகார்த்திகேயனை தேடி ஓடிய இயக்குனர்…

மேலும் இதில் இயக்குனர் சிவாவின் தம்பியும் நடிகருமான பாலா இப்படத்தில் ஒரு முக்கியமான பாத்திரத்தில் நடித்து வருகின்றார். சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. ரஜினி – நயன்தாரா இடையேயான டூயட் பாடலுக்கும் ரசிகர்களிடம் நல்ல ரெஸ்பான்ஸ்.

rajini kushboo

இந்நிலையில், இப்படம் குறித்து சமீபத்தில் நடிகை குஷ்பூ பேசியுள்ளார். ரஜினி தன்னுடன் அண்ணாமலை படத்தில் நடிக்கும்போது எப்படி இருந்தாரோ அப்படியேதான் இன்னமும் இருக்கிறார். அவர் கொஞ்சம் கூட மாறவே இல்லை என்றார்.

அதாவது படப்பிடிப்புக்கு சற்று தாமதமாக வந்தாலும் அனைவரிடமும் மன்னிப்பு கேட்பார். இப்போதும் அந்தப் பழக்கத்தை கொண்டுள்ளார் என்றார். மேலும், இப்படத்தில் நீங்கள், படையப்பா, அருணாச்சலம் படத்தில் பார்த்த அதே 90ஸ் ரஜினியை பார்க்கலாம் என கூறியுள்ளார்.

இதையும் படிங்க: சிம்பு போனால் என்ன நான் வரேன் – அண்ணாத்தயுடன் போட்டியிடும் சசிகுமார்

இதில் தன்னுடைய கேரக்டர் பற்றி அவர் ஏதும் பேசவில்லை. ஏற்கனவே ரஜினிக்கு ஜோடியாக நடித்தவராச்சே.. இப்போ என்ன கேரக்டரில் நடிக்கிறார் என ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளார்கள்.

Published by
adminram