தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக இருப்பவர் விஜய். 30 வருடங்களுக்கு மேல் சினிமாவில் நடித்து வருகிறார். தற்போது அரசியல்வாதியாகவும் மாறியிருக்கிறார். அவர் அரசியலுக்கு சென்று விட்ட நிலையில் அவர் நடித்திருக்கும் கடைசி திரைப்படம்தான் ஜனநாயகன். அதிரடி ஆக்சன் மற்றும் அரசியல் கலந்த திரைப்படமாக ஜனநாயகன் உருவாகியிருக்கிறது. ஆனால் இந்த திரைப்படம் சென்சார் பிரச்சினைகளில் சிக்கி இதுவரை வெளியாகாமல் இருக்கிறது.
தணிக்கை சான்றிதழ் கொடுக்கும் நேரத்தில் படத்தை கிடப்பில் போட்ட தணிக்கை வாரியம் படத்தை மீண்டும் மறுதணிக்கை செய்யப் போகிறோம் என சொல்ல அதிர்ச்சியடைந்த தயாரிப்பு நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
நேற்று கூட இந்த வழக்கை விசாரித்த நீதிபதில் தீர்ப்பு தேதியை குறிப்பிடாமல் வழக்கை தள்ளிவைத்தனர். எனவே எப்போது இந்த வழக்கு விசாரணைக்கு வந்து திர்ப்பு வரும் என்பது யாருக்கும் தெரியவில்லை.
இந்நிலையில், ஜக பிரமுகர் குஷ்புவிடம் ‘ஜனநாயகன் பட பிரச்சினையில் நடிகர் சங்கம் தலையிடாதது ஏன்?’ என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் கூறிய குஷ்பு ‘சம்பந்தப்பட்ட நடிகர் கோரிக்கை வைத்தால் மட்டுமே நடிகர் சங்கம் உதவி செய்யும்’ என சொல்லியிருக்கிறார்.
தமிழ் சினிமாவில்…
நேற்று துபாய்…
ஆர்.பார்த்திபனிடம் உதவி…
2016 ஆம்…
தமிழ் சினிமாவில்…