குஷ்புவால் தடைப்பட்ட படப்பிடிப்பு..,கடுப்பான இயக்குனர் – கண்ணீர் சிந்திய குஷ்பு!..

சில கதாநாயகிகளுக்கு ஒரே ஒரு திரைப்படம் கூட மாஸ் ஹிட் கொடுத்துவிடும். அப்படி ஒரு படத்தில் தமிழ்நாடு முழுக்க பிரபலமானவர் நடிகை குஷ்பு. தமிழில் பல கதாநாயகிகளுக்கு இந்த மாதிரியான நிகழ்வு நடந்துள்ளது என்றாலும் குஷ்பு அளவிற்கு மற்ற நடிகைகளுக்கு ரசிகர்கள் உருவானார்களா? என தெரியவில்லை.

1991 ஆம் ஆண்டு குஷ்பு நடிப்பில் வெளியான திரைப்படம் சின்னத்தம்பி. இந்த படத்தில் பிரபு கதாநாயகனாக நடித்திருந்தார். பி.வாசு இயக்கிய இந்த திரைப்படம் அப்போதைய காலக்கட்டத்தில் பெரும் ஹிட் கொடுத்தது.

குஷ்புவிற்கு எக்கச்சக்கமான ரசிகர்கள் உருவானதும் இந்த காலக்கட்டத்தில்தான். சின்னத்தம்பி படங்களில் நடித்த காலக்கட்டத்தில் குஷ்புவிற்கு தமிழே தெரியாது. அதற்கு பிறகு நடிகன் திரைப்படத்தில் மீண்டும் பி.வாசுவுடன் பணிப்புரியும் வாய்ப்பை பெற்றார் குஷ்பு.

நடிகன் திரைப்படம் முழுக்க முழுக்க ஊட்டியில் எடுக்கப்பட்டது. அதில் குஷ்பு சத்யராஜூடன் பேசும் காட்சி படமாக்கப்பட இருந்தது. இந்த காட்சியை காலை 6 மணிக்கு ஒரு ஏரிக்கு அருகில் எடுக்கப்பட இருந்தது. ஏனெனில் அந்த நேரத்தில் ஏரிக்கு மேலே வெள்ளை நிறத்தில் பனி படர்ந்திருக்கும்.

அப்போது படப்பிடிப்பு நடத்தினால் சிறப்பாக இருக்கும் என நினைத்தார் பி.வாசு. இதுக்குறித்து எல்லாம் முடிவு செய்யப்பட்டது. மறுநாள் 5.30 மணிக்கே எல்லா நடிகர்/ நடிகையர்களும் வந்துவிட்டனர். ஆனால் குஷ்புவை மட்டும் இன்னும் காணவில்லை.

ஏற்கனவே படப்பிடிப்புக்கு கிளம்பியிருந்தார் குஷ்பு. ஆனால் இறுதி நேரத்தில் கொஞ்சம் மேக்கப் வேலைகள் இருந்ததால் சற்று தாமதமானது. இதனால் 6.25 க்குதான் குஷ்பு வந்தார். குஷ்புவை கண்ட பி.வாசு மிகவும் கோபமாகிவிட்டார்.

ஏனெனில் ஏரியில் இருந்த பனிமூட்டம் ஏற்கனவே கலைந்திருந்தன. ஒரு படப்பிடிப்பிற்கு சரியாக வர தெரியாதா? என திட்ட தொடங்கினார் பி.வாசு. இதனால் அங்கேயே அழத் துவங்கிவிட்டார் குஷ்பு. பிறகு கண்ணை துடைத்துக்கொண்டு அந்த காட்சியை நடித்து கொடுத்துள்ளார். இதை அவரே ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

 

Related Articles

Next Story