Categories: Cinema History Cinema News latest news

குஷி படத்திற்கு நோ சொன்ன வாரிசு நடிகர்… இப்போ நடிக்க வாய்ப்பே இல்லையாம்…

தமிழ் சினிமாவின் வெற்றி படமான குஷி படத்திற்கு நோ சொன்னது நான் எடுத்து மிக மோசமான முடிவு எனக் கூறியிருக்கிறார் வாரிசு நடிகர் ஒருவர்.

தமிழ் சினிமாவின் மிகப்பெரிய இயக்குனர்களில் ஒருவர் பாரதிராஜா. இவரின் படத்திற்கு இன்று ரசிகர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால் இவர் வளர்ந்த அளவு மகனை சினிமாவில் வளர்க்க முடியவில்லை. மணிரத்னத்தின் ‘பம்பாய்’ படத்துல அவர்கிட்ட அசிஸ்டென்ட்டா சினிமாவிற்கு வந்தவர் மனோஜ் பாரதிராஜா.

நடிகர் மனோஜ்

ஆனால் இவரை நடிகராக உயர்த்தவே பாரதிராஜா விரும்பினாராம். இதனால் மிகப்பெரிய பொருட்செலவில் தாஜ்மஹால் படம் மூலம் நடிகராக எண்ட்ரியானார். இந்த படத்தில் ராஜீவ் மேனன், மணிரத்னம் என பல முன்னணி பிரபலங்கள் பணியாற்றினராம். படமும் வெளியாகி அவருக்கு தொடர் வாய்ப்புகளை கொடுத்திருக்கிறது. இருந்தும் அவரால் ஒரு இடத்தினை தக்க வைக்க இயலவில்லை.

தற்போது சிகப்பு ரோஜாக்கள் 2 வை வெப் சீரிஸாக இயக்கும் பணியில் இருக்கிறாராம். தொடர்ச்சியாக அந்த வெப்சீரிஸில் இயக்குனர் பாரதிராஜா நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கிறது. த்ரில்லர், ஹியூமர்னு ரெண்டு வகையான ஸ்கிரிப்ட் எழுதி வெச்சிருப்பதாகவும் அதை படமாக்குற வேலைகளும் போயிட்டு இருப்பதாக மனோஜ் பேட்டி ஒன்றில் தெரிவித்து இருக்கிறார்.

குஷி

அதுமட்டுமல்லாது தனது சினிமா வாழ்க்கையிலே மிகப்பெரிய தவறாக குஷி மற்றும் கற்றது தமிழ் படத்தினை மிஸ் செய்தது தான் எனவும் குறிப்பிட்டு இருக்கிறார்.

Published by
Akhilan