ரஜினிகிட்ட எனக்கு இருக்க ஒரே வருத்தம் இதுதான்!.. ஃபீலிங்ஸ் காட்டும் குஷ்பு…

Published on: December 21, 2023
rajini
---Advertisement---

நடிகை குஷ்புவுக்கு தமிழ் சினிமாவில் அறிமுகமான துவக்கத்திலேயே ரஜினியுடன் தர்மத்தின் தலைவன் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அப்போது குஷ்பு அறிமுக நடிகை. ஆனால், ரஜினியோ சூப்பர்ஸ்டார். அப்படி வளர்ந்தவர்தான் குஷ்பு. பின்னாளில் குஷ்புவுடன் சின்னத்தம்பி உள்ளிட்ட பல படங்களிலும் நடித்தார்.

பிரபுவுடன் குஷ்பு நடித்த படங்களே அவரை ரசிகர்களிடம் பிரபலப்படுத்தியது. 90களில் முன்னணி நடிகைகளில் ஒருராக இருந்த குஷ்பு ரஜினியுடன் மன்னன், அண்ணாமலை, பாண்டியன். நாட்டுக்கொரு நல்லவன் ஆகிய படங்களில் நடித்தார். எனவே, ரஜினி மீது நல்ல அன்பும், மரியாதையும் வைத்திருக்கிறார் குஷ்பு.

இதையும் படிங்க: 16 ஆயிரம் கோடி சொத்து.. ரஜினியுடன் மீட்டிங்!.. லைக்காவுக்கு போட்டியா களமிறங்கும் தயாரிப்பாளர்…

சிவா இயக்கத்தில் ரஜினி நடித்த அண்ணாத்த படத்திலும் ரஜினியுடன் சில காட்சிகளில் குஷ்பு நடித்திருக்கிறார். இப்போது தீவிர அரசியல்வாதியாக குஷ்பு மாறிவிட்டார். திமுகவில் நுழைந்த குஷ்பு அதன்பின் காங்கிரஸில் சேர்ந்தார். அதன்பின் தன்னை பாஜகவில் இணைத்துகொண்டார்.

குஷ்பு முன்னணி நடிகையாக இருந்தபோது இவருக்கு வெறித்தனமான ரசிகர்கள் இருந்தனர். அதில் சிலர் இவருக்கு கோவில் கட்டிய கதையெல்லாம் நடந்தது. இயக்குனர் சுந்தர் சியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவருக்கு 2 மகள்களும் உண்டு. ஊடகம் ஒன்றில் ரஜினியுடன் நடித்த அனுபத்தை குஷ்பு பகிர்ந்து கொண்டார்.

kushboo

அவருடன் எந்த காட்சியில் வேண்டுமானால் நடித்துவிடலாம். ஆனால், காமெடி காட்சிகளில் பின்னி பெடலெடுத்துவிடுவார். அவர் நடிப்பதை பார்த்தாலே நமக்கு வயிறு குலுங்க சிரிப்பு வந்துவிடும். நடிக்கவே முடியாது. அதேபோல், ரஜினி சார் ஒரு மிகச்சிறந்த நடிகர். அவர் சூப்பர்ஸ்டார் என்கிற இமேஜுக்குள் சிக்கிகொண்டுவிட்டார். அதனால், நல்ல கலைப்படங்களில் இப்போது அவர் நடிப்பதில்லை. அதில் எனக்கு எப்போதும் வருத்தம் உண்டு’ என குஷ்பு கூறியுள்ளார்.

இதையும் படிங்க:நான்தான்னு யார் சொன்னா?.. என்னை வாழ வச்சதே ரஜினிதான்!.. மனம் திறந்து பேசிய பாலச்சந்தர்…

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.