என் மேரேஜுக்கு இங்கதான் டிரெஸ் எடுப்பேன்.. துணிக்கடையில் வியந்த குயின்ஷி (வீடியோ)...
என் கல்யாணத்துக்கு கண்டிப்பா இங்கதான் டிரஸ் எடுப்பேன் என தி நகர் ஷாப்பிங் சென்று வியந்துள்ளார் குயின்ஷி. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசனில் போட்டியாளர்களின் ஒருவராக கலந்து கொண்டு கடந்த சில வாரங்களுக்கு முன்னர் வெளியேறியவர் குயின்ஷி.
பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய இவர் கிறிஸ்துமஸ் புத்தாண்டு தின கொண்டாட்டங்களுக்காக தி நகரில் உள்ள வேலவன் ஸ்டோர்ஸ் கடையில் ஷாப்பிங் செய்திருந்தார்.
இவர் ஷாப்பிங் செய்த வீடியோக்கள் தொடர்ந்து சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. அந்த வகையில் தற்போது மற்றொரு வீடியோவும் வெளியாகி உள்ளது.
அந்த வீடியோவில் வேலவன் ஸ்டோர்ஸ் கடையில் உள்ள கலெக்சன்களை பார்த்து வியந்துள்ள இவர் விலையை கேட்டு ஆச்சரியப்பட்டுள்ளார்.
இதுவரைக்கும் எங்கேயும் பார்க்காத இவ்வளவு கலெக்ஷன்களை இங்க தான் பார்க்கிறேன். இவங்க ஆள் ரவுண்டர் போல எல்லாமே இருக்கு. கண்டிப்பா என் கல்யாணத்துக்கு இங்க தான் புடவை வாங்குவேன் என உறுதியாக கூறியுள்ளார்.
அப்படி என்னவெல்லாம் கலெக்ஷன் இருக்கு? என்பதை முழுசா தெரிஞ்சுக்க இந்த வீடியோவை பாருங்க..