Connect with us

காத்துவாக்குல குண்டை தூக்கிப்போட்ட நயன்தாரா காதலர்.! சேதுபதி நிலைமை.?!

Cinema News

காத்துவாக்குல குண்டை தூக்கிப்போட்ட நயன்தாரா காதலர்.! சேதுபதி நிலைமை.?!

தொடர்ந்து வரிசையாக படங்கள் நடித்துவந்த விஜய் சேதுபதிக்கு அண்மைகாலமாக எந்த திரைப்படமும் வெளியாகாமல் இருந்தது. இதனை போக்க அடுத்தடுத்த திரைப்படங்கள் அவருக்கு வெளியாக காத்திருக்கின்றன. அதை தொடர்ந்து ஏப்ரல் 28-ஆம் தேதி காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படம் ரிலீஸ் ஆக உள்ளது.

இந்த படத்தை விக்னேஷ் சிவன் இயக்கி உள்ளார். சமந்தா, நயன்தாரா என இரு ஹீரோயின்கள் நடித்துள்ளனர். ஒரே நேரத்தில் இரண்டு பெண்களை காதலிக்கும் கதாநாயகன் பற்றிய கதை இதுவாகும்.

இந்த திரைப்படத்தின் டிரைலர் நேற்று முன்தினம் எந்தவித ஆர்ப்பாட்டமும் இன்றி வெளியானது. வெளியானது முதல் தற்போது வரை ரசிகர்கள் மத்தியில் இந்த ட்ரெய்லர் பற்றிய பேச்சுதான் இணையத்தில் உலா வருகிறது.

தற்போது கிடைத்த தகவல் என்னவென்றால், இந்த திரைப்படத்தில் நயன்தாரா, சமந்தா ஆகிய இருவரும் ஓரினச்சேர்க்கையாளர் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இதனை கேட்ட ரசிகர்கள் அதிர்ந்து போயுள்ளனர்.

இதையும் படியுங்களேன் – ரஜினிக்கு டிமிக்கி கொடுத்த அந்த பக்கம் தெறித்து ஓடிய லோகேஷ்.! ஓ இதான் விஷயமா.?

 

என்னதான் இதனை எல்லாம் அரசாங்கம் ஏற்றுக் கொண்டாலும், இன்னும் சினிமா ரசிகர்கள் இந்த மாதிரியான கதைக்களங்களுக்கு இன்னும் தயாராகவில்லை என்று தான் கூற வேண்டும். அதன் காரணமாகத்தான் இன்னும் அதுபற்றி எந்த பெரிய இயக்குனரும் தனது திரைப்படங்களில் குறிப்பிட்டது இல்லை. ஆதலால் ஒருவேளை இந்த செய்தி உண்மையானால் படம் பெரிய வெற்றி பெறுவது சந்தேகமே என்ற தகவல்தான் தற்போது சினிமா வட்டாரத்தில் எழுந்துள்ளது.

எதுவாக இருந்தாலும் இன்னும் சில தினங்களில் படம் வெளியாகிவிடும். வெளிவந்த பின்னர்தான் அதில் எந்த மாதிரியாக கதைக்களங்களை கையாண்டுள்ளனர் என்பது தெரியவரும். நிச்சயம் கலகலப்பான ஒரு திரைப்படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top