More
Categories: Cinema News latest news

இந்த படத்தின் அட்ட காப்பி தான் அந்த புது படமா.?! நயன்தாரா காதலருக்கு வந்த சோதனை.!

வரும் ஏப்ரல் மாதம் 28ஆம் தேதி வெளியாக உள்ள காதுவக்குல ரெண்டு காதல் திரைப்படத்தை தமிழ் சினிமா ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா ரசிகர்கள் மட்டுமின்றி, அஜித் படத்தை விக்னேஷ் சிவன் இயக்க உள்ளதால் அஜித் ரசிகர்களும் இந்த படத்தை மிகவும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

Advertising
Advertising

காதுவாக்குல ரெண்டு காதல் திரைப்படமானது, ஒரே நேரத்தில் இரண்டு காதல் செய்யும் இளைஞரை பற்றிய கலகலப்பான கதை என கூறப்படுகிறது. ராம்போவாக விஜய் சேதுபதியும், கண்மணியாக சமந்தாவும், கதீஜாவாக சமந்தாவும் நடித்துள்ளனர்.

அனிருத் இசையில் வெளியான வெளியான அனைத்து திரைப்படங்களும்  சூப்பர் ஹிட்டாகியுள்ளது. அதுவே படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ளது. தற்போது இந்த பட கதை பற்றி ஓர் தகவல் கோலிவுட்டில் பரவி வருகிறது.

இதையும் படியுங்களேன் – எங்களுக்கு இடையில் கனெக்சன் இருந்தது உண்மைதான்.! இப்டி சொல்லிடீங்களே லாஸ்லியா.?!

அதாவது, பாலுமஹேந்திரா இயக்கிய ரெட்டை வாழ் குருவி படத்திலும் இதே போல, நடிகர் மோகன் ஒரே நேரத்தில் இருவரை காதலிப்பது போல கதைக்களம் இருக்கும். அதன் மார்டன் வெர்சன் தான் காதுவாக்குல ரெண்டு காதல் என கூறப்படுகிறது.

இந்த விக்னேஷ் சிவன் தான் அஜித்தின் அடுத்த படத்தை இயக்க உள்ளார். இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க உள்ளது. அந்த படத்தை ஏற்கனவே மணி ஹீஸ்ட் வெப் சீரிஸின் தழுவல் என கூறி வருகின்றனர்.

Published by
Manikandan

Recent Posts