ரகசியம் காத்த ‘லால்சலாம்’ படக்குழு - கபில்தேவ் செஞ்ச வேலை - தர்மசங்கடத்தில் ரஜினி
‘லால் சலாம்’ ரஜினி படமா இல்ல விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் படமா என்று தெரியவில்லை. ஆனால் ரஜினியின் புண்ணியத்தில் அந்த இரு நடிகர்களுக்கும் ஒரு நல்ல எதிர்காலம் அமைந்தால் சரி என்றுதான் கோடம்பாக்கத்தில் பேசி வருகின்றனர். விஷ்ணு விஷாலும் விக்ராந்தும் சினிமாவில் ஒரு நிலையான இடத்தை பிடிக்க போராடி வருகின்றனர். விக்ராந்த் விஜயின் சகோதரர் என்றாலும் அந்த அளவுக்கு வாய்ப்புகள் வரவில்லை.
ஒரு பெரிய பேனரில் இதுதான் முதல் முறை விஷ்ணு விஷாலுக்கும்வ் விக்ராந்திற்கும். படத்தை ரஜினியின் மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்க லைக்கா நிறுவனம் இந்தப் படத்தை தயாரிக்கிறது. படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.
இந்த நிலையில் லால் சலாம் படத்தில் மொய்தீன் பாய் என்ற கதாபாத்திரத்தில் ரஜினி ஒரு தாதாவாக வருகிறாராம். அதுவும் இந்தப் படத்தில் கேமியோ ரோலில் வரும் ரஜினி வெறும் 8 நாள்கள் மட்டும்தான் கால்ஷீட் கொடுத்திருக்கிறாராம்.
அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளும் அவ்வப்போது படமாக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் நேற்று மும்பைக்கு பறந்த ரஜினி திடீரென பிரபல கிரிக்கெட் வீரர் கபில்தேவ் உடன் இருக்கும் புகைப்படங்கள் வைரலானது. அதன் பிறகு தான் தெரிந்தது லால்சலாம் படத்தில் கபில் தேவும் இருக்கிறார் என்று.
கபில் தேவ், விக்ராந்த், விஷ்ணு விஷால் சம்பந்தப்பட்ட காட்சிகள் ஏற்கெனவே எடுத்து விட்டார்களாம். அதை ரகசியமாகவே பாதுகாத்து வந்திருக்கின்றனர். நேற்றுதான் கபில்தேவ், ரஜினி சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டதாம்.இதனால் மிகவும் பூரித்துப் போன கபில்தேவ் ஆர்வக்கோளாறில் ரஜினியுடன் இருக்கும் புகைப்படத்தை அவரே அவரின் வலைதளப்பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்.
அதன் பிறகு தான் இந்த செய்தி வெளியில் தெரிய ஆரம்பித்ததாம். வேறு வழியில்லாமல் ஒரு உலகமே போற்றக்கூடிய கிரிக்கெட் வீரர். அவரே இணையத்தில் பகிர்ந்த பிறகு நாமும் சும்மா இருந்தால் நன்றாக இருக்காது என ரஜினியும் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் இந்த செய்தியை பகிர்ந்தாராம். இந்த செய்தியை வலைப்பேச்சு பிஸ்மி தெரிவித்தார்.