கிரிக்கெட்டர்களின் ஈகோ… தப்பித்தாரா ஹரிஷ் கல்யாண்?.. லப்பர் பந்து திரை விமர்சனம்…
Labbar panthu: மனைவி மற்றும் பிள்ளைகளை விரும்பாமல் கிரிக்கெட்டை மட்டுமே விரும்பி விளையாடும் நபராக வருகிறார் அட்டக்கத்தி தினேஷ். வேலையை விட தொடர்ந்து கிரிக்கெட்டில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார். அதுபோல, சாதி பாகுபாடால் சொந்த கிராமத்திலேயே நிராகரிக்கப்படும் கிரிக்கெட் வீரராக இருக்கிறார் ஹரிஷ் கல்யாண்.
சொந்த ஊரில் வாய்ப்பு கிடைக்காததால் கிடைக்கும் கிரிக்கெட் அணிகள் எல்லாம் சென்று விளையாடி தன்னுடைய ஆசையை தீர்த்துக் கொள்கிறார். இப்படி கிரிக்கெட்டின் மீது காதல் கொண்டிருக்கும் இருவருக்கும் திடீரென ஏற்படும் மோதல் தான் லப்பர் பந்து. இவர்களின் ஈகோவால் நடக்கும் பிரச்சினை மற்றும் அதிலிருந்து அவர்கள் எப்படி தாண்டி வந்து சாதித்தனர் என்பதை கிரிக்கெட் மூலமாக சொல்லியிருக்கின்றனர்.
இதையும் படிங்க: ரஜினி படத்துல ஓபனிங் சாங்… கமல் பாடுவதற்கு வாய்ப்பு?
வயது முதிர்ந்தவராக நடித்திருக்கிறார் அட்டகத்தி தினேஷ். ஆனால் எந்த இடத்திலும் அது தெரியாத வகையில் நடிப்பால் அதை கவர் செய்து விடுகிறார். ஹீரோவாக வரும் ஹரிஷ் கல்யாண் இயல்பான நடிப்பில் கட்டி போடுகிறார். தினேஷின் மனைவியாக வரும் ஸ்வஸ்திகா, ஹரிஷ் கல்யாண் காதலியாக மற்றும் தினேஷின் மகளாக வரும் சஞ்சனா ரசிக்க வைக்கின்றனர்.
இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் இசையில் பாடல்கள் படத்திற்கு பக்கபலமாக அமைந்திருக்கிறது. ஒளிப்பதிவாளர் தினேஷ் புருஷோத்தமனின் கேமரா கிரிக்கெட் போட்டியும், கதாபாத்திரங்களின் உணர்ச்சியும் சரியாக கடத்துகிறது. ஆனால் படத்தின் திரைக்கதை பல இடங்களில் யூகிப்பது போலவே அமைந்திருக்கிறது. இருந்தும் காமெடி மற்றும் உணர்ச்சி மிகுந்த காட்சிகளால் அதை இயக்குனர் கவர் செய்து விடுகிறார்.
லப்பர் பந்து சிக்ஸர் எடுத்துவிட்டது.
இதையும் படிங்க: கோலிவுட்டின் முதல் ஹீரோ அஜித்தான்! மதுபாலா சொன்ன விஷயம் என்ன தெரியுமா?