சூப்பர் ஸ்டாராவே இருந்தாலும் படம் நல்லா இருந்தாத்தானே ஓடும்… அட்டர் ஃப்ளாப் ஆன படத்தால் நயன்தாராவுக்கு வந்த சோதனை…
தென்னிந்தியாவின் லேடி சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து வரும் நயன்தாரா தற்போது பாலிவுட்டில் அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடித்து வரும் “ஜவான்” திரைப்படத்தில் நடித்து வருகிறார். மேலும் நயன்தாரா “ஜவான்” திரைப்படத்தை தொடர்ந்து தனது 75 ஆவது திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இத்திரைப்படத்தை நிலேஷ் கிருஷ்ணா என்பவர் இயக்கவுள்ளார்.
இதனிடையே கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நயன்தாரா நடித்த “கனெக்ட்” திரைப்படம் வெளிவந்தது. இத்திரைப்படத்தை அஸ்வின் சரவணன் இயக்கிருந்தார். நயன்தாரா தனது ரவுடி பிக்சர்ஸ் பேனரின் கீழ் இத்திரைப்படத்தை தயாரித்திருந்தார்.
“கனெக்ட்” திரைப்படம் வெளியானபோது அத்திரைப்படத்திற்கு எங்கு திரும்பினாலும் நெகட்டிவ் ரிவ்யூக்களே வந்தன. அஸ்வின் சரவணன் இதற்கு முன் நயன்தாராவை வைத்து அட்டகாசமான ஒரு ஹாரர் திரைப்படத்தை தந்திருந்தார். ஆதலால் “கனெக்ட்” திரைப்படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் அத்திரைப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை.
இதையும் படிங்க: ஷூட்டிங்கிற்கே வராமல் இந்தியன் 2 படத்தை இயக்கும் ஷங்கர்…? என்னப்பா சொல்றீங்க!
இந்த நிலையில் “கனெக்ட்” திரைப்படம் குறித்த ஒரு அதிர்ச்சியான தகவல் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. அதாவது இத்திரைப்படம் ரூ.5 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டிருக்கிறது. கிட்டத்தட்ட 20 கோடி லாபம் வரும் என படக்குழுவினர் எதிர்பார்த்தனராம்.
ஆனால் “கனெக்ட்” திரைப்படம் வெளியானதில் இருந்து தற்போது வரை இத்திரைப்படத்தின் வசூல் 5 கோடியை கூட தாண்டவில்லையாம். ஆதலால் இத்திரைப்படத்தின் தயாரிப்பாளரான நயன்தாராவுக்கு இத்திரைப்படத்தின் மூலம் நஷ்டமே ஏற்பட்டிருக்கிறது.