லைலா செய்த அட்ராசிட்டியால் பறிபோன படவாய்ப்பு… அப்போவே இவ்வளவு ரகளையை கொடுத்திருக்காங்களே!

Laila
90’ஸ் கிட்ஸ்களின் கனவுக்கன்னியாக திகழ்ந்த லைலா சிரிப்பழகி என்று பெயர் பெற்றவர். தனது கியூட்டான நடிப்பால் இளைஞர்களின் மனதை கொள்ளைக்கொண்டவர். இவருக்கென்று தனி ரசிகர் கூட்டமே இருந்தது. அந்தளவுக்கு தனது சிரிப்பால் பலரின் இதயங்களில் குடிபுகுந்தவர் லைலா.
“அள்ளித்தந்த வானம்”, “பார்த்தேன் ரசித்தேன்”, “பிதாமகன்”, “உள்ளம் கேட்குமே” போன்ற பல திரைப்படங்களில் அழகு பதுமையாக வலம் வந்த லைலா, தமிழ் மட்டுமல்லாது ஹிந்தி, கன்னடம், தெலுங்கு, மலையாளம் போன்ற பல மொழிகளில் பேன் இந்திய நடிகையாக ரவுண்டு வந்தவர். கடந்த 2006 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். அதன் பின் சினிமாவில் இருந்து ஒதுங்கியே இருந்தார் லைலா.

எனினும் கடந்த 2022 ஆம் ஆண்டு கார்த்தி நடிப்பில் வெளியான, “சர்தார்” திரைப்படத்தின் மூலம் மீண்டும் கம்பேக் கொடுத்தார் லைலா. அதனை தொடர்ந்து “வதந்தி” வெப் சீரீஸில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்தார். இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு லைலா செய்த அட்ராசிட்டி குறித்து ஒரு சம்பவத்தை பகிர்ந்துகொண்டுள்ளார்.
1997 ஆம் ஆண்டு பிரபுதேவா, அப்பாஸ், சிம்ரன், ரம்பா ஆகியோரின் நடிப்பில் வெளியான திரைப்படம் “வி.ஐ.பி.”. இத்திரைப்படத்தை சபாபதி தக்சினாமூர்த்தி என்பவர் இயக்கியிருந்தார். கலைப்புலி எஸ்.தாணு இத்திரைப்படத்தை தயாரித்திருந்தார்.

இத்திரைப்படத்தில் சிம்ரன் நடிக்க இருந்த கதாப்பாத்திரத்தில் முதலில் லைலாதான் ஒப்பந்தமானாராம். அப்போது லைலாவுக்கு அட்வான்ஸ் பணத்தை கொடுக்க தனது மேனேஜரை அனுப்பியிருக்கிறார் எஸ்.தாணு. அப்போது லைலா, “தயாரிப்பாளர் வந்து என்னை பார்க்கவே இல்லை. இது என்ன புரொடக்சன் கம்பெனி” என அலுத்துக்கொண்டாராம். இவ்வாறு தொடக்கத்திலேயே லைலா செய்த அட்ராசிட்டியால் அவரை படத்தில் இருந்தே நீக்கிவிட்டாராம் எஸ்.தாணு. அதனை தொடர்ந்துதான் அத்திரைப்படத்தில் சிம்ரன் நடித்திருக்கிறார்.
இதையும் படிங்க: தனது நண்பரின் உயிரை காப்பாற்ற கொள்கையையே தூக்கி எறிந்த கலைவாணர்… ஏன் அப்படி செய்தார் தெரியுமா?