சூட்டிங்கல நடந்த அந்த சம்பவம்.. நடிக்காம வந்துட்டேன்...லைலாவை சமாதானப்படுத்திய படக்குழு..!
சினிமாவிலயே நடிப்பிற்கு இலக்கணமாக திகழ்பவர் நடிகை லைலா. இவரின் கலகல சிரிப்பால் அனைவரையும் எளிதில் ஈர்க்கும் தன்மை கொண்டவர். பிதாமகன், நந்தா, தீனா போன்ற படங்களில் நடித்து மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றார். மேலும் ஏராளமான படங்களிலும் நடித்துள்ளார்.
இதனிடையில் திருமணமாகி நடிப்பிற்கு பிரேக் கொடுத்தார். கணவன், குழந்தை என பிஸியாக இருக்கும் இவர் தற்போது சினிமாவில் ரீ என்ரி ஆகிறார். அவரை அண்மையில் சந்தித்தபோது சினிமாவில் தான் எதிர்கொண்ட பிரச்சினைகள், கேலிக்கையான தருணங்கள் முதலியவற்றை பகிர்ந்தார்.
அப்போது மறக்க முடியாத தருணம் என்ன என கேட்ட போது, ஒரு தெலுங்கு படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போது சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த ஒரு சம்பவத்தை பற்றி கூறினார். அந்த படத்தில் லைலா கேக் கட் பண்ணுவது மாறியான காட்சியில் நடிக்க லைலா தயாராகி வந்தாராம்.
அப்போது கேக் கட் பண்ணும் போது அருகில் இருந்த ஹீலியம் பலூன் திடீரென பலத்த சத்தத்துடன் எதிர்பாராதவிதமாக வெடித்தது. அதை கேட்டதும் எனக்கு மிகவும் பயமாக இருந்தது. இன்னும் அந்த சம்பவத்தை நினைத்தாலே பயங்கரமாக இருக்கு. நல்ல வேளை யாருக்கும் எந்த ஆபத்தும் இல்லை. உடனே நான் ஸ்பாட்டில் இருந்து கிளம்பி விட்டேன். படக்குழிவிலிருந்து என்னை சமாதானபடுத்தினார்கள். மீண்டும் அந்த படத்தில் நடிச்சு கொடுத்து விட்டு வந்தேன் என்று கூறினார்.