ரஜினியின் நெருங்கிய நண்பரின் மகளுக்கே இந்த நிலையா? திரையுலகில் தலைவிரித்தாடும் பாலியல் தொல்லை...!
கோலிவுட் பாலிவுட் என்று பாரபட்சம் இல்லாமல் ஒட்டுமொத்த திரையுலகிலும் இருக்கும் ஒரே பிரச்சனை தான் பாலியல் தொல்லை. திரையுலகில் வாய்ப்பு கேட்டு வரும் இளம் பெண்கள் முதல் டாப் நடிகையாக வலம் வரும் முன்னணி நடிகைகள் வரை அனைவரும் பாலியல் தொல்லை மற்றும் வன்முறைக்கு ஆளாகும் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது.
அதிலும் சமீபகாலமாக பலர் இதுபோன்ற குற்றச்சாட்டுகளை அதிகளவில் முன்வைத்து வருகிறார்கள். ஆனால் வாரிசு நடிகைகளுக்கு இந்த தொல்லைகள் இருக்காது என நினைக்கிறார்கள். உண்மையில் அப்படியில்லை. அவர்களுக்கும் இதுபோன்ற பிரச்சனைகள் நடக்கதான் செய்கிறது.
அந்த வகையில் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினியின் நெருங்கிய நண்பரான பிரபல தெலுங்கு நடிகர் மோகன் பாபுவின் மகள் லட்சுமி மஞ்சுவும் இந்த பிரச்சனையை சந்தித்துள்ளாராம். இவர் ஹாலிவுட், பாலிவுட், கோலிவுட் என பல மொழிப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழில் கடல், காற்றின் மொழி போன்ற படங்களில் நடித்துள்ள லட்சுமி மஞ்சு சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கூறியதாவது, "ஐடி துறை, வங்கி என பலதுறைகளில் பெண்களுக்கு பாலியல் துன்புறுத்தல் நடந்து வருகிறது. குறிப்பாக சினிமாவில் பட வாய்ப்பு தேடி வரும் நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் தமிழ், தெலுங்கு சினிமாவில் தொடர்ந்து வருகிறது.
நான் இதெல்லாம் எனக்கு நடக்காது என நினைத்தேன். நான் மோகன் பாபுவின் மகள் என்பதால் அப்படி நினைத்தேன். ஆனால் இங்கு யாரையும் விட்டு வைப்பதில்லை" என மிகவும் உருக்கமாக பேசியுள்ளார். பிரபல நடிகர் மோகன் பாபுவின் மகள் அதுவும் ரஜினிகாந்தின் நண்பர் மகளுக்கே இப்படி ஒரு நிலைமையா என திரையுலகினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.