சந்திரமுகி இயக்குநர் ரூமுக்கு அழைத்தார்!.. ஷூட்டிங்கில் இப்படியா பண்ணுவாங்க! லட்சுமி மேனன் ஃபீலிங்.

by Akhilan |   ( Updated:2024-01-16 04:28:23  )
சந்திரமுகி இயக்குநர் ரூமுக்கு அழைத்தார்!.. ஷூட்டிங்கில் இப்படியா பண்ணுவாங்க! லட்சுமி மேனன் ஃபீலிங்.
X

Lakshmi Menon: தமிழ்சினிமாவில் முதல் படத்திலே பெரிய அறிமுகம் கிடைப்பது என்னவோ சில நடிகைகளுக்கு தான். அப்படி ஒரு புகழை பெற்றவர் லட்சுமி மேனன். அவர் நடிப்பில் வெளிவந்த எல்லா படங்களுமே நல்ல ரீச்சை கொடுத்தது.

கும்கி படத்தில் அவர் நடிப்புக்கே செம அப்ளாஸ் கிடைக்க வாய்ப்புகள் குவிய தொடங்கியது. தொடர்ந்து சுந்தரபாண்டியன் படமும் நல்ல ரீச்சை கொடுக்க கோலிவுட்டின் முக்கிய நடிகையானார். ஆனால் அதன் பின்னர் வெளிவந்த படங்களில் லட்சுமி மேனனுக்கு பெரிய முக்கியத்துவம் கொடுக்கவில்லை.

இதையும் படிங்க: ரசிகர்கள் மீது வெறுப்பை கொட்டும் அஜித்!… ஒரு காலத்தில் எப்படி இருந்தார் தெரியுமா? பிரபலம் சொல்லும் சம்பவம்!…

அஜித்துடன் வேதாளம், விஷாலுடன் நான் சிகப்பு மனிதன் படங்கள் இவர் கேரியரில் முக்கிய படங்களாக இருந்தன். அதன் பின்னர் அம்மணி படிப்பில் கவனம் செலுத்த இருப்பதாக கூறி சினிமாவில் இருந்து பிரேக் எடுத்தார். ரொம்ப நாள் தமிழ் படங்களுக்கு நோ சொல்லி வந்தார்.

அதன் பின்னர் சந்திரமுகி இரண்டாம் பாகத்தில் நடித்து தன்னுடைய இரண்டாம் இன்னிங்ஸை கொடுத்து இருக்கிறார். படத்தில் அவருக்கு முக்கியமான ரோல் என்றாலும் பெரிய ரீச் கொடுக்கவில்லை. தற்போது அப்படம் குறித்து லட்சுமி மேனன் கொடுத்து இருக்கும் பேட்டி வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க: சின்ன பட்ஜெட்டில் பெரிய லாபம்!.. தனுஷுக்கு கோடிகளை கொட்டி கொடுத்த 5 படங்கள்…

அதன் பின்னர் என் நடிப்பில் எதுவும் குறை இருந்தால் தனியாக அறைக்கு அழைத்து அதில் மாற்றங்களை சொல்லுவார். பி.வாசு எனக்கு குரு போன்றவர் எனவும் தெரிவித்து இருக்கிறார். தற்போது சப்தம் மற்றும் மழை என்ற படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story