இனி எல்லாமே அப்படிதான் -நயன்தாரா ரூட்டுக்கு மாறிய லட்சுமி மேனன்

by adminram |
lakshmi menon
X

கும்கி படம் மூலம் அறிமுகம் ஆனவர் லட்சுமி மேனன். முதல் படமே சூப்பர்ஹிட். தொடர்ந்து கார்த்தியுடன் கொம்பன்,விஷாலுடன் பண்டிய நாடு என்று ஹிட படங்களை கொடுத்தார். விரைவில் முன்னணி நடிகையாக வலம் வருவார் என்று எதிர்பார்க்கபட்ட நிலையில் திடீரென காணாமல் போனார்.

நீண்ட இடைவெளிக்கு பிறகு மெலிந்த தோற்றத்தில் பிரபுதேவாவுடன் ஒரு படத்தில் ஒப்பந்தம் ஆனார். ஆனால் இன்றுவரை அந்த படம் வெளியாகவில்லை. மீண்டும் தனக்கு ரீ எண்ட்ரி கிடைக்கவில்லை என்று வருத்ததில் இருந்தார்.

lakshmi menon

lakshmi menon

இந்த நிலையில் தற்போது லட்சுமி மேனன் கதையின் நாயகியாக ஒப்பந்தம் ஆகியுள்ளார். AGP என்று பெயரிடப்பட்டுள்ள அந்த படத்தின் பர்ஸ்ட் லுக் நேற்று வெளியானது. இனி வழக்கமாக டூயட் பாடுவதை தவிர்த்து கதைக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை மட்டுமே லட்சுமி மேனன் ஏற்றுக் கொள்வராம். அதாவது நயன்தாரா வழியை பின்பற்ற இவர் முடிவு செய்துள்ளதாக கூறுகிறார்கள். எப்படியோ நல்ல படங்களை தேர்வு செய்து ரசிகர்களை மகிழ்வித்தால் போதும்.

agp movie

agp movie

ஏஜிபி படத்தினை ரமேஷ் சுப்ரமணியன் என்பவர் இயக்குகிறார். இவர் 'நாய்கள் ஜாக்கிரதை ' போன்ற படங்களை இயக்கிய சக்தி சௌந்தர்ராஜனிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story