மீண்டும் உடல் எடை அதிகரித்து குண்டாக மாறிய நடிகை.. வைரலாகும் புகைப்படம்!

by adminram |
lakshmi menon
X

சுந்தரபாண்டியன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமானவர் லட்சுமி மேனன். ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்ற இப்படம் 100 நாட்கள் கடந்து ஓடி சாதனை படைத்தது. அடுத்ததாக வெளியான கும்கி திரைப்படம் மிகப்பெரிய வெற்றிபெற்றது.

குஷ்பூவைப்போல இவரும் சற்று உடல் பூசினாற்போல இருந்ததால் இவருக்கும் ஏராளமான ரசிகர்கள் இருந்தனர். தமிழ் சினிமாவில் அறிமுகமான புதிதில் லட்சுமி மேனன் கொடிகட்டி பறந்தார். ஆனால் அதன்பிறகு இவர் சரியான கதைகளை தேர்ந்தெடுக்காததால் ஒரு சில படங்கள் தோல்வியடைந்தது.

lakshmi menon

lakshmi menon

இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த படம் 'றெக்க' (2016). அதன்பின் கடந்த ஐந்து வருடங்களாக இவர் எந்த புதிய படத்திலும் நடிக்கவில்லை. இதையடுத்து கடந்த ஜனவரி மாதம் இவர் முத்தையா இயக்கத்தில் விக்ரம் பிரபுவுடன் இணைந்து நடித்திருந்த 'புலிக்குத்தி பாண்டி' படம் நேரடியாக சன் டிவியில் வெளியானது.

ஏற்கனவே இவர் இயக்கத்தில் குட்டிப்புலி, கொம்பன் ஆகிய படங்களில் நடித்திருந்தார் லட்சுமி மேனன். இவ்விரு படங்களும் வெற்றி பெற்றதால் இந்தப்படமும் கண்டிப்பாக வெற்றிபெறும், மீண்டும் தமிழில் விட்ட இடத்தை பிடித்துவிடலாம் என நினைத்தார்.

இப்படத்திற்கா தனது உடல் எடையை பாதியாக குறைத்து சற்று ஸ்லிம்மாக மாறியிருந்தார். ஆனால், இப்படம் லட்சுமி மேனனுக்கு பெரிய ஏமாற்றத்தை கொடுக்கும் வகையில் தோல்விப்படமாக அமைந்தது. தற்போது இவர் கைவசம் இரண்டு புதிய படங்கள் மட்டுமே உள்ளது.

lakshmi menon

lakshmi menon

இந்நிலையில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது புதிய புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். இதில் உடல் எடை சற்று அதிகரித்து குண்டாக காணப்படுகிறார். ஒல்லியானதால்தான் படம் ஓடவில்லை என மீண்டும் குண்டாகிவிட்டாரோ என்கிறார்கள் ரசிகர்கள்.

Next Story