விஜய் கூடவா...? எனக்கெல்லாம் அந்த எண்ணமே இல்ல...! ஓவரா பேசிய பிரபல இளம் நடிகை..
2012 ஆம் ஆண்டு பிரபு சாலமன் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான படம் கும்கி. இந்த படத்தில் புதுமுக
நடிகையாக அறிமுகமாயிருப்பார் நடிகை லட்சுமி மேனன். மிகவும் சிறு வயதிலயே நடிக்க வந்தவர். பார்க்கவும் அழகாக இருப்பார். இந்த படம் வெற்றி நடை போட்டது.
இந்த படத்திற்கு பிறகு லட்சுமி மேனனை தேடி பட வாய்ப்புகள் வந்தது. தொடர்ந்து வெற்றிப் படங்களையே கொடுத்தார். ஜெயம் ரவி,விஷால், சசிகுமார், விஜய்சேதுபதி,அஜித் ஆகியோருடன் நடித்துள்ளார். இவர் நடித்த ரெக்க படம் படு தோல்வியை அடைந்தது. அஜித்துடன் வேதாளம் படத்தில் அஜித்திற்கு தங்கச்சியாக நடித்திருப்பார்.
தொடர்ந்து படங்கள் பண்ணிக் கொண்டிருந்தவர் திடீரென காணாமல் போய் விட்டார். நடிப்பிற்கு கொஞ்ச நாள் இடைவேளி விட்டிருந்தார். மீண்டும் விக்ரம் பிரபுவுடன் ஜோடி சேர்ந்து ரீ என்ரி கொடுத்தார்.ஆனால் அந்த படமும் சரியாக அமையவில்லை. இந்த இடைப்பட்ட நாள்களில் பார்க்கவே சற்று வித்தியாசமாக இருந்தார்.
நல்ல உயரம், ஒல்லியான தோற்றத்தில் வித்தியாசமாக காணப்பட்டார். இந்த நிலையில் அண்மையில் ஒரு பேட்டியில் அஜித்துடன் வேதாளம் படத்தில் நடித்து பின் பிரேக் எடுத்த நீங்க, சரி அஜித் கூட படம் நடிச்சாச்சு, பின் விஜய் கூட படம் பண்ணுவோம் அப்படினு நினைச்சீங்களா? உடனே பிரேக் எடுத்துட்டீங்க எப்படி? என கேட்க அதற்கு லட்சுமி மேனன் விஜய் கூட....னு இழுத்து அப்படி எதும் நான் நினைக்கவே இல்ல, அந்த எண்ணமும் வரலனு பதில் கூறினார். என்ன நடக்குமோ அதுதான் நடக்கும் என அசால்டா பதில் கூறினார்.