House Owner: சினிமாவை பொறுத்தவரைக்கும் ஒரு படம் ஓடுவதும் மட்டையை போடுவதும் அந்தப் படத்தின் கதைதான் உறுதி செய்கிறது. சமீபகாலமாக குறிப்பாக சொல்லப் போனால் இந்த வருடம் முழுவதும் சின்ன பட்ஜெட் படங்கள்தான் ஆதிக்கம் செலுத்தியிருக்கின்றன.
யாருமே எதிர்பாராத ஒரு வெற்றிய கொடுத்த படங்கள் பெரும்பாலும் சின்ன பட்ஜெட் படங்கள்தான். பெரிய நடிகர்கள் கிடையாது. புதுமுக நடிகர்கள், பெரிய ப்ரடக்ஷனும் கிடையாது. ஆனாலும் அந்தப் படங்கள் வெற்றிப் பெற்றது என்றால் அதற்கு முக்கிய காரணம் கதை.
இதையும் படிங்க: எத்தனை பேருங்க வாலி படத்துக்கு சொந்தம் கொண்டாடுவீங்க.. சிம்ரன் பண்ண வேண்டியது என் ரோல்.. ஷாக் கொடுத்த நடிகை..!
இதன் மூலம் பெரிய நடிகர்களை நம்பி படையெடுக்கும் இயக்குனர்களுக்கு இது ஒரு பாடம் என்றும் சொல்லப்படுகிறது. இந்த நிலையில் பிரபல திரைப்பட நடிகையும் இயக்குனருமான லட்சுமி ராமகிருஷ்ணன் ஒரு விஷயத்தை பற்றி கூறினார்.
அவர் 2019 ஆம் ஆண்டு ஹவுஸ் ஓனர் என்ற திரைப்படத்தை எடுத்தாராம். ஆனால் படத்தை லாபத்திற்குத்தான் விற்றிருக்கிறார்.ஆனால் மார்கெட்டிங் பண்றதுக்கு மட்டும் 60 லட்சம் வரை செலவு செய்ய வைத்தார்களாம். படம் ஒரு பைசாக்கு கூட பிரயோஜனம் இல்ல என்று கூறினார். அதனால் அந்தப் படத்தின் போஸ்டரை தூக்கிவிட்டு ‘சிந்து பாத்’ பட போஸ்டரை ஒட்டியிருக்கின்றனர்.
இதையும் படிங்க: மோகனிடம் கேட்கக் கூடாத கேள்வியை கேட்டு வாங்கிக் கிட்ட இயக்குனர்! அவரிடம் இந்த கேள்வியை கேட்கலாமா?
ஹவுஸ் ஓனர் படம் பற்றி கொடுத்த பேட்டியையும் யுடியூப்பில் இருந்து எடுத்துவிட்டு அந்த நேரத்தில் சிந்துபாத் பட பேட்டியை போட்டிருக்கின்றனர். அதுமட்டுமில்லாமல் 138 தியேட்டர் கொடுக்கிறேன் எனச் சொல்லிவிட்டு 32 தியேட்டர் கூட கொடுக்கவில்லை என லட்சுமி ராமகிருஷ்ணன் கூறினார்.
இயக்குனர் ஆர்.வி.உதயகுமார்…
தமிழ் சினிமாவில்…
நடிகர் தனுஷ்…
இன்று தமிழ்…
Nagarjuna: நாகர்ஜுனா…