Cinema News
லால்சலாமில் முதல் பாதி சரியில்லை தான்… டைரக்டராக நான் செஞ்சது தப்பு… ஓபனா சொன்ன ஐஸ்வர்யா ரஜினிகாந்த்…
Aishwarya Rajinikanth: ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருந்த லால் சலாம் படத்தில் நிறைய நெகட்டிவ் விமர்சனங்கள் வந்தது. அதுகுறித்தும் தன்னுடைய டைரக்ஷன் குறித்தும் பேசி இருக்கும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் லால் சலாம் திரைப்படம் வெளியானது. இப்படத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த், கேமியோவாக ரஜினிகாந்த், செந்தில் உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள் படத்தில் நடித்திருந்தனர். படம் மிகப்பெரிய அளவில் ரீச் கொடுக்கும் என எதிர்பார்த்து இருந்த நிலையில் மிகப்பெரிய தோல்வியை தழுவியது. இயக்குனர் மீது அதிக அளவில் குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டது.
இதையும் படிங்க:பாலிவுட்டை நோக்கி நகரும் ரஜினி! அடுத்த படத்திற்கான பக்கா ஸ்கெட்ச்.. இதுதான் காரணமா?
படத்தின் வசூல் படு பாதாளத்துக்கு சென்றது. அதுமட்டுமல்லாமல் லால் சலாம் திரைப்படத்தின் ஓடிடி விற்பனையும் இழுத்துக்கொண்டே செல்கிறது. கிட்டத்தட்ட பல முன்னணி ஓடிடிக்கள் லால்சலாமை வாங்காமல் ஒதுக்குவதாகவும், சில நிறுவனங்கள் மிகக்குறைந்த விலைக்கே கேட்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கிறது. இந்நிலையில் படத்தின் மீதான விமர்சனம் குறித்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஓபனாக பேசி இருக்கிறார்.
அந்த பேட்டியில் இருந்து, நான் முதலில் மொய்தீன் பாய் கேரக்டரை 10 நிமிடத்திற்கு தான் எழுதினேன். மற்ற கேரக்டர் போல் தான் இருந்தது. ஆனால் சூப்பர்ஸ்டார் அந்த கேரக்டரில் ஒப்பந்தம் செய்யப்பட்டதும் மொத்த கதையையும் மாற்றினேன். இதனால் தான் அவர் கேரக்டர் முக்கியமாகி அவர் காட்சியின் நீளமும் அதிகரிக்கப்பட்டது. அவரை சுற்றியே படமானது.
இதையும் படிங்க: எனக்கு பட்டை நாமம் போட்டாங்க!. உனக்கு நாமக்கட்டி!.. சிவக்குமாரை அதிரவைத்த சிவாஜி!..
அதுமட்டுமல்லாமல் கமர்ஷியலுக்காக மொய்தீன் பாயை முதல் பாதியில் வைக்கப்பட வேண்டிய நிலை. அதனால் படத்தின் ரிலீசுக்கு 2 நாளுக்கு முன்னர் மொத்த இரண்டாம் பாதியையும் மாற்றி அமைத்தோம். கதை சரியாக இருந்தாலும் தலைவரை காட்டிய பின்னர் மொத்தமும் அவர் பின்னால் அமைந்தது. நான் படத்தினை மொத்தமாக பார்த்தேன். ஆனால் ரசிகர்கள் முதல் பாதி, இரண்டாம் பாதியாக பார்க்கிறார்கள். முதல் பாதியில் நிறைய பிரச்னை இருந்ததாக கூறினார்கள்.
கதை சரியாக இல்லை. காட்சிகள் சரியாக தொடுக்கப்பட இல்லை என்றனர். யார் கதையை ஃபாலோ செய்வது என ரசிகர்கள் குழம்பினர். விஷ்ணு விஷால் கதையை ஃபாலோ செய்வதா, ரஜினிகாந்தை ஃபாலோ செய்வதா இல்லை செந்திலை ஃபாலோ செய்வதா என ரசிகர்களுக்கு பிரச்னையாக இருந்ததாக கூறினர். அந்த படத்தில் இருந்து நான் அதை கற்றுக்கொண்டு இருக்கேன்.
ரசிகர்கள் படத்தினை பகுதியாக தான் பார்க்கிறார்கள். நான் நினைச்ச மாதிரி அவங்களுக்கு அது சென்றடையவில்லை என்பதை தெரிந்து கொண்டேன். அடுத்தடுத்த படங்கள் எடுக்கும் போது அதை என் பாடமாக எடுத்துக்கொள்வேன் எனவும் குறிப்பிட்டு இருக்கிறார்.
இதையும் படிங்க: எத்தனை ஹீரோக்கள் நடிக்க வேண்டிய படம் தெரியுமா? ஆனால் சொன்ன காரணம்.. அதான் லேடி சூப்பர் ஸ்டார்