படுதோல்வியை சந்தித்த லால் சலாம்!. 8வது நாள் வசூல் இவ்வளவுதானா?!.. ரஜினி ரசிகர்கள் பேரதிர்ச்சி..
Lal salaam: ஐஸ்வர்யா ரஜினி இயக்கத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் மற்றும் ரஜினி கெஸ்ட் ரோலில் நடித்து கடந்த 9ம் தேதி வெளியான திரைப்படம் லால் சலாம். இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்திருந்தது. கிரிக்கெட் விளையாட்டை மையமாக கொண்டு அதில் மதமும், அரசியலும் எப்படி நுழைகிறது என்பதை கதை, திரைக்கதையாக அமைந்திருந்தனர்.
மொய்தீன் பாய் என்கிற வேடத்தில் ரஜினி நடித்திருந்தார். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்திருந்தார். அதோடு, ஐஸ்வர்யாவும் பல வருடங்களுக்கு பின் மீண்டும் இயக்குனர் அவதாரம் எடுத்தார். இந்த படத்தின் டீசர் மற்றும் டிரெய்லர் வீடியோவும் நல்ல வரவேற்பை பெற்றது. ஜெயிலர் படம் மெகா ஹிட் அடித்ததால் லால் சலாமும் கல்லா கட்டும் என எதிர்பார்க்கப்பட்டது.
இதையும் படிங்க: சென்னை ரசிகர்களை சந்தித்த விஜய்!.. அட எங்கேன்னு பாருங்க!.. கோட் சூட்டிங் ஸ்பாட் இனி அனல் பறக்குமே!..
ஆனால், படத்திற்கு ரசிகர்களிடம் வரவேற்பு இல்லை. துவக்கத்திலேயே முன்பதிவு டிக்கெட்டுகள் அதிகமாக விற்பனை ஆகவில்லை. பல தியேட்டர்களில் இருக்கைகள் காலியாக கிடந்தது. இதற்கு காரணம் என்பது யாருக்கும் புரியவில்லை. ஜெயிலர் படத்தை பார்க்க போன ரசிகர்கள் ஏன் லால் சலாம் பார்க்கவில்லை என்பது தெரியவில்லை.
ஒருவேளை லால் சலாம் படத்தில் ரஜினி கெஸ்ட் ரோலில் மட்டுமே நடித்திருப்பதுதான் காரணமா என்பது தெரியவில்லை. படம் ரிலீஸான நாள் முதலே இப்படம் பெரிய வசூலை பெறவில்லை. தமிழகத்தில் முதல்நாள் 4 கோடி, இரண்டாம் நாள் 3 கோடி. 3ம் நாள் 2.8 கோடி வசூல் செய்ததாக சொல்லப்பட்டது. அதன்பின் லட்சங்களில் குறைந்துபோனது.
இதையும் படிங்க: தடபுடலாக நடைபெறும் திருமண ஏற்பாடுகள்.. வருங்கால கணவருடன் ரகுல் ப்ரீத் சிங்! வைரலாகும் புகைப்படம்
ஒரு வாரம் கழித்து தமிழகத்தில் இப்படம் ரூ.10 கோடி மட்டுமே வசூல் செய்ததாக செய்திகள் வெளியானது. இதுவரை ரஜினி நடிப்பில் வெளியான எந்த படமும் இப்படி வசூலில் மண்ணை கவ்வியது இல்லை என சொல்கிறார்கள். தமிழகம் மட்டுமில்லாமல் கன்னடா, ஆந்திரா, கேரளா போன்ற மாநிலங்களிலும் இப்படம் வரவேற்பை பெறவில்லiை.
இந்நிலையில், படம் வெளியாகி 8ம் நாளான நேற்று இப்படம் தமிழகத்தில் வெறும் ரூ.27 லட்சத்தை மட்டுமே வசூல் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே இந்த படத்தின் ஓடிடி இன்னும் விற்கப்படவில்லை. படம் தியேட்டரில் வரவேற்பை பெறாத நிலையில் ஓடிடியில் லால் சலாம் விலை போகுமா என்பது தெரியவில்லை.
இதையும் படிங்க: விஜய்க்கு தமிழில் ‘க்’ தெரியாது!.. அவரோட பையனுக்கு தமிழே தெரியாது… கலாய்த்த பிரபலம்…