அதகளம் செய்யும் ரஜினி.. அதிரவைக்கும் ரஹ்மான்.. வெளியான லால் சலாம் பட முதல் விமர்சனம்...

by சிவா |
rajini
X

Lal Salaam: ஜெயிலர் பட வெற்றி கொடுத்த உற்சாகத்தில் மளமளவெனெ படங்களை புக் செய்து வருகிறார் ரஜினி. ஒருபக்கம் ஜெய்பீம் பட இயக்குனர் ஞானவேல் படம், அடுத்து லோகேஷ் கனகராஜ் படம் என அதிர வைத்தார். அதேபோல், மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில் உருவான லால் சலாம் படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்.

வை ராஜா வை படம் வெளியாகி 7 வருடங்களுக்கு பின் ஐஸ்வர்யா இயக்கியுள்ள திரைப்படம் இது. தனுஷிடமிருந்து விலகி வந்த பின் அவர் இயக்கும் முதல் படம் இது. இனிமேல் தனது கவனம் சினிமாவில் மட்டும்தான் என முடிவு செய்து விட்டு களத்தில் இறங்கி இந்த படத்தை இயக்கி முடித்திருக்கிறார்.

இதையும் படிங்க: பொண்ணு படம்னு ரஜினி நடிக்க மாட்டார்!.. அதுக்கு வேற காரணம் இருக்கு.. செந்தில் சொன்ன விஷயம்!..

இந்த படத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் ஆகியோர் கிரிக்கெட் வீரர்களாக நடித்துள்ளனர். விளையாட்டில் மதமும், அரசியலும் நுழைந்தால் என்ன நடக்கும்?. ரஜினி அதை எப்படி முறியடிக்கிறார் என்பதுதான் இப்படத்தின் கதை. இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடந்தது. அதில் ஐஸ்வர்யா பேசியதும், ரஜினி பேசியதும் விவாதப்பொருளாக மாறியது. இந்த விழாவில்தான் விஜய் தனக்கு போட்டியில்லை என்கிற கருத்தை ரஜினி முதன் முறையாக பேசினார். மேலும், தான் சொன்ன காக்கா - கழுகு கதைக்கும் விஜய்க்கும் சம்பந்தம் இல்லை எனவும் சொன்னார்.

இதையும் படிங்க: ரஜினி வாங்கிய முதல் காருக்குப் பின்னால இப்படி ஒரு அவமானமா?.. சூப்பர்ஸ்டார் செஞ்சதுதான் ஹைலைட்!..

ஒருபக்கம் லால் சலாம் படம் அடுத்த மாதம் அதாவது பிப்ரவரி 9ம் தேதி வெளியாகவுள்ளது. எனவே, முக்கிய புள்ளிகள் மற்றும் வினியோகஸ்தர்கள் இந்த படத்தை பார்த்துள்ளனர். அப்படி பார்த்ததில் படத்தின் கதை நன்றாக இருப்பதாகவும், அதை ஐஸ்வர்யா அழகாகவும், திறமையாகவும் காட்டியிருக்கிறார் எனவும், ரஜினியின் ஸ்கிரின் பிரசன்ஸ் செமையாக இருப்பதாகவும் பலரும் சொல்லி இருக்கிறார்கள்.மேலும், ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசை மிரட்டலாக இருப்பதாகவும் சிலர் கூறியுள்ளனர்.

இதையெல்லாம் வைத்து பார்க்கும்போது லால் சலாம் படம் ரசிகர்களை கவர்ந்து ஒரு பிளாக் பஸ்டர் படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: ஒரு கிளாஸ் விஸ்கி கையில இருந்தா தினமும் ஹனிமூன்தான்!.. ஓப்பனாக பேசிய ரஜினி…

Next Story