தொலஞ்சி போன ஹார்ட் டிஸ்க் கிடைச்சிடுச்சி போல!.. ஓடிடியில் வெளியாகும் லால் சலாம்!..

Published on: August 27, 2024
lal salaam
---Advertisement---

Lal salaam: ரஜினியின் மூத்தமகள் ஐஸ்வர்யா. நடிகர் தனுஷை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதன்பின் செல்வராகவனிடம் சில படங்களில் உதவியாளராக வேலை செய்து சினிமா இயக்கம் பற்றி கற்றுக்கொண்டார். அதன்பின் தனுஷை வைத்து ‘3’ என்கிற படத்தை இயக்கினார். இந்த படத்தில் தனுஷ் – ஸ்ருதிஹாசன் இடையே நெருக்கமான காட்சிகள் இடம் பெற்றிருந்தது.

அனிருத்தின் இசையில் பாடல்கள் சூப்பர் ஹிட் ஆனாலும் படம் சுமாராக போனது. அதன்பின் கௌதம் கார்த்தியை வைத்து வை ராஜா வை என்கிற படத்தை இயக்கினார். இந்த படம் ஓடவில்லை. அதன் பின் சினிமா வீரன் என்கிற தலைப்பில் ஒரு டாக்குமெண்டரி படத்தை எடுத்தார்.

இதையும் படிங்க: அதுக்குள்ள 25 நாள் போஸ்டரா?.. அந்தகன் படத்தை கலாய்க்கும் புளூசட்ட மாறன்!…

அதுவும் பெரிய வரவேற்பை பெறவில்லை. அதன்பின் லால் சலாம் என்கிற ஒரு கதையை எழுதினார். கிரிக்கெட்டை மையமாக வைத்து உருவான இப்படத்தில் விக்ராந்த் மற்றும் விஷ்ணு விஷால் ஆகியோர் முக்கிய கதபாத்திரங்களில் நடித்தனர். மேலும், ஐஸ்வர்யாவின் அப்பா ரஜினி இந்த படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். இப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்தது.

இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். ரஜினிக்கு இப்படத்தில் பன்ச் வசனங்களும், சண்டை காட்சிகளும் கூட இருந்தது. இந்த படம் ரிலீஸுக்கு முன் எடுக்கப்பட்ட சில காட்சிகள் இருந்த ஹார்ட் டிஸ்க் காணாமல் போய் விட்டதாக சொல்லி அதிர வைத்தார் ஐஸ்வர்யா. ஏனெனில், திரையுலகில் இதுவரை எந்த இயக்குனரும் அப்படி சொல்லியது இல்லை.

lal salaam

எனவே, சமூகவலைத்தளங்களில் பலரும் ஐஸ்வர்யாவை ட்ரோல் செய்தார்கள். இந்த வருடம் பிப்ரவரி 9ம் தேதி இப்படம் வெளியானது. ஆனால், படத்தின் கதை, திரைக்கதையில் சுவாரஸ்யம் இல்லை என படம் பார்த்தவர்கள் பலரும் சொன்னார்கள். எனவே, இப்படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெறவில்லை.

மேலும், படம் வெளியாகி 6 மாதங்கள் ஆகியும் இப்படம் ஓடிடியில் வெளியாகவில்லை. தியேட்டரில் வரவேற்பு இல்லை என்பதால் இப்படத்தை வாங்க ஓடிடி நிறுவனங்கள் ஆர்வம் காட்டவில்லை என்று சொல்லப்பட்டது. இந்நிலையில், சன் நெக்ஸ்ட் ஓடிடியில் இப்படம் வருகிற செப்டம்பர் 20ம் தேதி வெளியாகவுள்ளது என இப்போது அறிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும், தொலைந்து போன ஹார்ட் டிஸ்க் கிடைத்ததால்தான் இப்போது ஓடிடியில் ரிலீஸ் செய்கிறார்கள் எனவும் செய்திகள் வந்து கொண்டிருக்கிறது.

இதையும் படிங்க: வசூலை அள்ளும் வாழை, டிமான்ட்டி காலனி 2…. 4 நாள் வசூல் இவ்வளவு கோடியா?….

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.