எல்லா ஏரியாலையும் ஐயா கில்லி… பழைய பார்முக்கு திரும்பிய ரஜினி… பாட்ஷா இரண்டாம் பாகமா?

by Akhilan |
எல்லா ஏரியாலையும் ஐயா கில்லி… பழைய பார்முக்கு திரும்பிய ரஜினி… பாட்ஷா இரண்டாம் பாகமா?
X

தற்போதைய சூழலில் இணையத்தினை ட்யூன் செய்தாலே கேட்கும் ஒரே பெயராக மாறி இருக்கிறார் ரஜினிகாந்த். அந்த புகழை தக்க வைத்துக்கொள்ள ரஜினி மகளின் ஐடியா தற்போது ஹாட் டாப்பிகாக மாறி இருக்கிறது.

ரஜினிகாந்தின் மூத்தமகள் ஐஸ்வர்யா. கோலிவுட்டில் ஏற்கனவே 3 படத்தினை இயக்கி இருந்தார். அப்படம் நல்ல வரவேற்பினை பெற்றது. இதை தொடர்ந்து தற்போது அவர் இயக்கத்தில் உருவாகி வரும் படம் தான் லால் சலாம். இப்படத்தில் முதலில் ரஜினி ஒரு சின்ன கேமியோ ரோல் செய்வதாகவே திட்டமிடப்பட்டு இருந்தது.

தையும் படிங்க: வேணும்னு கூட்டிட்டு வந்து இப்படியா அடிக்கிறது! விஜயகாந்த் விட்ட அறையால் சுருண்டு விழுந்த ராதிகா

விஷ்ணு விஷால், விக்ராந்த் இணைந்து நடிக்கும் இப்படம் கிரிக்கெட்டினை மையமாக வைத்து இயக்கப்பட்டு இருக்கிறது. வட மாவட்டத்தில் இருந்து வரும் வீரர்களினை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் விஷ்ணு விஷாலின் தாய் மாமனாகவும், டாக்டர் ராஜசேகர் மனைவி ஜீவிதாவின் அண்ணனாக நடித்துள்ளார்.

ரொம்ப நாள் கழித்து ஜீவிதாவுக்குமே இப்படம் ரீஎண்ட்ரியாக அமைந்து இருக்கிறது. ஆன்மீகவாதியான ரஜினிகாந்த் இப்படத்தில் மொய்தீன் பாய் என்னும் மூஸ்லீம் வேடத்தில் நடித்திருப்பது இப்படத்திற்கும் மிகப்பெரிய ப்ளஸாகவே பார்க்கப்படுகிறது.

தையும் படிங்க: நீ படிச்ச ஸ்கூல அவர் வாத்தியாருப்பா… வசூலுக்காக ரஜினியை சீண்டிய விஜய் தேவரகொண்டா!

இரண்டாம் பாகத்தில் முழுவதுமே ரஜினி காட்சிகள் அமைந்து இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கிறது. அதிலும் பாட்ஷா இரண்டாம் பாகம் போல மாஸ் காட்சிகள் நிறைய அமைக்கப்பட்டு இருக்கிறதாம். இப்படம் ரஜினியின் மற்ற மத ரசிகர்ளுக்கும் ஒரு நேச்சுரல் கனெக்ட் கொடுக்கும். அவர் மீது இருக்கும் சர்ச்சைகளும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பு செய்திருக்கும் இப்படத்தின் பெரும்பாலான வேலைகள் முடிந்த நிலையில் படம் கடைசி கட்டத்தினை நெருங்கி இருக்கிறது. விரைவில் இப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும். ஜெய்லர் வெற்றியால் பீக்கில் இருக்கும் ரஜினியின் புகழால் இந்த படத்தின் வசூல் அதிகரிக்கும் என்பதால் முடிந்தவரை படத்தினை விரைவில் வெளியிடும் முடிவில் இருக்கிறாராம் ஐஸ்வர்யா.

Next Story