Connect with us

Cinema News

ஓடிடி ரிலீஸுக்கு தயாரான லால் சலாம்.. வேற மாதிரி இருக்கும்.. அப்டேட் சொன்ன ஐஸ்வர்யா..

Aishwarya Rajinikanth: இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தன்னுடைய இயக்கத்தில் வெளியான லால் சலாம் திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்து கொடுத்திருக்கும் அப்டேட் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஜெயிலர் படத்தின் வெற்றிக்கு பின்னர் ரஜினிகாந்த் பரபரப்பாக நடிப்பில் இறங்கினார். அந்த நேரத்தில் அவருடைய மூத்த மகளும், இயக்குனருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் இயக்கத்தில் லால் சலாம் படத்தில் நடித்திருந்தார். முதலில் 10 நிமிடம் வைக்கப்பட்டு இருந்த காட்சியை சிறப்பு கேமியோ ரோலாக மாற்றினார்.

இதையும் படிங்க: ஏன் பொது நிகழ்ச்சியில் கலந்து கொள்வதில்லை? அஜித்தே சொன்ன காரணம்

படம் ரிலீஸுக்கு முன்னர் இசை வெளியீட்டு விழாவில் பேசிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் படம் முக்கிய கதையை பேசும். அதுமட்டுமல்லாமல், மிகப்பெரிய விருதுகளை குவிக்கும் எனப் பேசினார். ஆனால் படம் ரிலீஸாகி பெரிய அளவில் மொக்கை வாங்கியது. அதை தொடர்ந்து அவர் கொடுத்த பேட்டியில் படத்தின் முக்கிய காட்சிகள் அடங்கிய ஹார்ட் டிஸ்க் தொலைந்துவிட்டது.

அதில் இருந்த காட்சியில் பிரபல நடிகர்கள் இருந்தனர். மீண்டும் அதை ஷூட் செய்யவே முடியாது. அது இருந்து இருந்தால் படத்தின் லெவலே வேறு இருக்கும் என்றார். இதனால் படத்தினை வெளியிட இருந்த நெட்பிளிக்ஸ் ஓடிடி நிறுவனம் தொலைந்த ஹார்ட் டிஸ்க்கை எடுத்து வாருங்கள்.

இதையும் படிங்க: எனக்கே மார்க்கெட் இல்ல!.. ஆனா அவர வச்சி படமெடுத்தேன்!.. ஓப்பனாக சொன்ன கமல்…

பின்னர் படத்தை வெளியிடலாம் என்றனர். அதனாலே படம் பல மாதங்களாக ஓடிடிக்கு வராமல் இருந்தது. இந்நிலையில், இந்தாண்டு சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான லால் சலாம் கண்டிப்பாக ஓடிடியில் வெளியாகும் எனத் தெரிவித்து இருக்கிறார். நெட்பிளிக்ஸ் நிறுவனம் வாங்கிய இப்படத்தின் ஹார்ட் டிஸ்க் மீட்கப்பட்டு இருக்கிறதாம்.

தொலைந்த காட்சிகளை படத்தில் எடிட் செய்து படத்தினை வித்தியாசமாக வெளியிட இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அப்டேட்டை கேட்ட ரசிகர்கள் இனி வயசுக்கு வந்தா என்ன வராட்டி என்ன என்றும் கலாய்த்து வருகின்றனர்.

Continue Reading

More in Cinema News

To Top