என்ன தான் லால் சலாம் படத்தில் ரஜினிகாந்த் நடித்திருந்தாலும் இந்த படத்தில் அவர் வெறும் கேமியோ ரோலில் தான் நடித்துள்ளார் என ஆரம்பத்தில்யே சொல்லி வருகின்றனர் கடைசி நேரத்தில் ரஜினிகாந்தை முன்னிறுத்தி ஐஸ்வர்யா ரஜினிகாந்தும் லைகாவும் புரமோஷன் செய்தாலும், விஷ்ணு விஷால், விக்ராந்த் நடித்துள்ள படத்தை முதல் நாளில் முண்டியடித்துக் கொண்டு ரசிகர்கள் பார்க்க வாய்ப்பே இல்லை.
புக் மை ஷோவில் பல திரையரங்குகளில் டிக்கெட் புக்கிங் காலையிலேயே தொடங்கப்பட்ட நிலையிலும் இன்னமும் பச்சை நிறமே காட்டுகின்றன. ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் நடித்துள்ள கிரிக்கெட் மத அரசியல் படத்தில் ரஜினிகாந்த் மொய்தீன் பாய் எனும் கதாபாத்திரத்தில் விக்ராந்துக்கு அப்பாவாக நடித்துள்ளார்.
இதையும் படிங்க: ஓவர் பந்தா காட்டி ரஜினி படத்தை இழந்த அனிருத்!.. இதெல்லாம் தேவையா புரோ!..
விஜய், அஜித் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுக்கே அப்பாவாக நடிக்காமல் இருந்து வரும் ரஜினிகாந்த் விஜய்யின் தம்பி விக்ராந்துக்கு அப்பாவாக இந்த படத்தில் நடித்து வருகிறார்.
பல ஆண்டுகள் கழித்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இந்தப் படத்தை இயக்கி உள்ள நிலையில், படத்தின் விமர்சனம் நல்லா இருந்தால் தான் படத்தை பார்க்க ஆட்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: நான் இல்லாமலே என் படத்துக்கு இசையா?!.. இளையராஜா – பாலச்சந்தர் பிரிந்த காரணம் இதுதான்!..
ரஜினிகாந்த் படத்துக்கு கூட்டம் வரவேண்டும் என்றால் வேட்டையன் வரும் போது 3 நாள் டிக்கெட்டுகளே கிடைக்காத நிலை உருவாகும் என்கின்றனர்.
எப்படி இருந்தாலும் ரஜினியை பெரிய ஸ்க்ரீனில் வந்தாலே பார்ப்போம் எனும் தீவிரமான ரசிகர்கள் மட்டுமே லால் சலாம் படத்தை தியேட்டருக்கு நாளைக்கு சென்று பார்ப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ரஜினி கேமியோ என்பதால் அதிக பட்சமாக முதல் நாள் வசூல் 5 கோடி வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ் சினிமாவில்…
பிரபல சினிமா…
Nayagan: மணிரத்னம்…
நடிகை பார்வதி…
நடிகை திரிஷா…