உலகளவில் 5 நாளில் லால் சலாம் வசூல் எவ்வளவு தெரியுமா?.. ரஜினி மகளால் நொந்து நூடுல்ஸ் ஆன லைகா!

Published on: February 14, 2024
---Advertisement---

ரஜினிகாந்த் கேமியோ ரோலில் நடித்த வள்ளி, குசேலன் உள்ளிட்ட படங்கள் எப்படி சரியாக ஓடவில்லையோ அதே போலத்தான் தனது மகள் இயக்கத்தில் அவர் நடித்து கடந்த வாரம் வெளியான லால் சலாம் திரைப்படமும் பெரிதாக ஓடவில்லை.

ஆனால், லைகா நிறுவனம் தொடர்ந்து பிளாக்பஸ்டர் என அறிவித்து இன்னும் ஒரு வாரம் எப்படியாவது படத்தை ஓட வைக்க வேண்டும் என புரமோஷன் செய்து வருகின்றனர்.

இதையும் படிங்க: லவ் அண்ட் லவ் ஒன்லி!.. காதலர் தினத்தை கொண்டாட தியேட்டருக்கு படையெடுத்த படங்கள்.. எல்லாமே தரம்!

ரஜினிகாந்த் படமாக ஆரம்பத்தில் புரமோஷன் செய்யப்பட்டாலும் இந்த படத்தை ரசிகர்கள் பெரிதும் கொண்டாடவில்லை. கடந்த ஆண்டு வெளியான ஜெயிலர் திரைப்படம் 600 கோடி வரை உலகளவில் வசூல் ஈட்டிய நிலயில், லால் சலாம் திரைப்படம் 5 நாட்களில் உலகளவில் வெறும் 15 கோடி ரூபாய் தான் வசூல் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்தியாவில் மட்டும் 12 கோடி ரூபாய் வசூலை லால் சலாம் இந்த 5 நாட்களில் ஈட்டியிருக்கிறது. அதில், தமிழ்நாட்டில் மட்டும் 10.55 கோடி வசூல் அள்ளியிருப்பதாக கூறுகின்றனர்.

இதையும் படிங்க: கல்லூரியில் கண்ணதாசனை கலாய்த்த மாணவர்கள்!.. கவிஞர் கொடுத்த பதிலடிதான் ஹைலைட்!..

பல கோடி பட்ஜெட்டில் ஐஸ்வர்யா ரஜினிகாந்தை நம்பி உருவாக்கப்பட்ட லால் சலாம் திரைப்படம் அதிகபட்சமாக 20 கோடி வசூலை 2வது வார முடிவில் உலகளவில் ஈட்டும் என்றும் அது தான் லைஃப் டைம் கலெக்‌ஷனாக இருக்கும் என்றும் கூறுகின்றனர்.

லைகா தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிப்பில் அடுத்து உருவாகி வரும் வேட்டையன் படம் தான் லைகா நிறுவனத்தை காப்பாற்ற வேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Saranya M

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.