இதுக்கு நான் காரணமே இல்லை.. இந்த நடிகர் இனி இங்க காலையே வைக்க முடியாது.. சுவாரஸ்யம் பகிரும் லலித்குமார்..!
Leo movie: லலித்குமார் தயாரிப்பில் ரிலீசாகி இருக்கும் லியோ படத்தில் சர்ச்சை ஒரு பக்கம் இருந்தாலும் வசூல் எக்கசக்கமாகி இருக்கிறது. இதை தயாரிப்பாளர் லலித்தே உறுதிப்படுத்தி இருக்கும் நிலையில் இன்னமும் சில சுவாரஸ்ய தகவலை வெளியிட்டு இருக்கிறார்.
இதுகுறித்து லலித் சமீபத்தில் அளித்த பேட்டியில், திரை விமர்சகர்கள் பலரும் லியோவின் இரண்டாம் பகுதி சுமாராகவே இருப்பதாக கூறினர். ஆனால் அதை இரண்டாம் முறை பார்க்கும் போது நன்றாக இருந்தது என்றனர். மேலும், முதல்முறை நிறைய எதிர்ப்பார்ப்பு இருந்தது.
இதையும் படிங்க: ஹாஸ்பிடலில் நடந்த மெடிக்கல் மாஃபியா! ஒரு ட்ரையலுக்கு 25 லட்சமா? விக்ரமன் மனைவிக்கு நடந்த அநியாயம்
இரண்டாவது முறை எல்லா தெரிந்து பார்க்கும் போது அதுவே போனதாக இருந்தது. எல்லா இடத்திலும் இதே விமர்சனத்தினை தான் பெற்று இருக்கிறேன். மேலும் எல்சியூ என்னுடைய விருப்பமாகவே இல்லை. அது லோகேஷ் செய்த ஒன்று தான்.
ஆனால் வில்லன் கதாபாத்திரத்துக்கு எனக்கு சஞ்சய் தத் தான் சரியாக இருப்பார் எனத் தோன்றியது. அதற்கு தான் அவரை நடிக்க வைக்க முடிவு செய்தோம். மேலும் படத்தின் முதல் பிரதியை பார்த்த போது எனக்கு சாண்டியின் நடிப்பு தான் ஆச்சரியமாக இருந்தது.
இதையும் படிங்க: 23 வருஷம் கழிச்சு விஜயால் கிடைச்ச பெருமைதான் இது! என்ன ஒரு மேஜிக்? பெருமிதத்தில் பிரபலம் சொன்ன தகவல்
அவருக்கு கால் செய்து இனி நீங்க டான்ஸ் கிளாஸ் போகவே முடியாது என்றேன். அவர் என்ன சார் ஏன் இப்படி சொல்றீங்க என்றார். அதுப்போல கொடூரமாக நடித்து இருக்கிறீர்கள் எனக் கூறினேன். இனி உங்களைப் பார்த்தால் இனிமே எல்லாரும் மிரண்டு தான் போவார்கள் எனக் கூறினேன்.
அது போல வெளியில் சொன்னது போல எனக்கும் கிளைமேக்ஸ் சண்டை காட்சியை குறைக்க வேண்டும் என்று தான் தோன்றியது. மற்றப்படி ஒளிப்பதிவாளர் மனோஜின் வேலையில் எனக்கும் முழு திருப்தி தான் எனவும் குறிப்பிட்டு இருந்தார்.