Connect with us

Cinema News

ஜெய் படத்தை வாங்க மாட்டேன்னு சொல்லிட்டேன்.. என் மேல அந்த பிரபலம் கடுப்பாக காரணமே அதுதான்.. லலித் பகீர்!

தளபதி விஜய் படத்தை தயாரித்த லலித் குமார்   படம் ரிலீஸான பிறகும் ஏகப்பட்ட பிரச்சனைகளை சந்தித்து வருகிறார். லியோ மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கி இருந்த நிலையில் படம் வெளியான பின்னர் படத்தின் இரண்டாம் பாதி சில இடங்கள் தொய்வை சந்தித்த நிலையில், கடும் விமர்சனங்களை சந்தித்தது.

ஆனால், விமர்சனங்களை தாண்டி லியோ திரைப்படம் மிகப்பெரிய வசூல் வேட்டையை முதல் நாளில் ஈட்டி 148 கோடி ரூபாய் வசூல் அடைந்ததாக அறிவிக்கப்பட்ட நிலையில், அந்த அறிவிப்பை தொடர்ந்து பொய்யான பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் என அஜித் மற்றும் ரஜினி ரசிகர்கள் தொடர்ந்து தாக்கி பேசி வந்தனர்.

இதையும் படிங்க: லியோ கலெக்‌ஷன் பற்றிய கேள்விக்கு நைஸா கழண்ட லோகேஷ் கனகராஜ்!.. செகண்ட் ஹாஃப் மொக்கைன்னு ஒத்துக்கிட்டாரு!..

அதன் பின்னர் வசூல் அறிவிப்பை தயாரிப்பாளர் லலித் குமார் நிறுத்திய நிலையில், அடுத்த அறிவிப்பை வெளியிட சொல்லுங்கள் என அலப்பறை கொடுத்தனர். முதல் வார முடிவில் 461 கோடி ரூபாயை லியோ வசூல் செய்ததாக மீண்டும் ஒரு அறிவிப்பு வந்த நிலையில், தாங்க முடியாத எதிர் அணியினர் சினிமாவில் பிரபலங்கள் என சுற்றிக் கொண்டு இருக்கும் சிலரை யூடியூப் வாயிலாக தயாரிப்பாளர் லலித் குமார் பொய்யான வசூல் கணக்கை தந்துள்ளார் என தொடர்ந்து பேசி லியோ படத்தை தோல்வி படமாக மாற்ற முயன்ற முயற்சிகளை எடுத்து வருகின்றனர்.

திருப்பூர் சுப்பிரமணியம், மீசை ராஜேந்திரன், பிஸ்மி, அந்தணன் மற்றும் தயாரிப்பாளர் தனஞ்செயன் உள்ளிட்டோர் லியோ படத்தின் வசூல் மிகவும் குறைவு என்றும் பொய்யான வசூல் கணக்கை லலித் குமார் சொல்லி நடிகர் விஜயை குஷிப்படுத்த முயற்சி செய்து வருகிறார் எனக் கூறிவந்த நிலையில், அதற்கெல்லாம் பதிலடி கொடுக்கும் விதமாக லலித்குமார் தனது புதிய பேட்டியில் வசூல் குறித்த விபரங்களையும் அதற்கு எதிராக பேசுபவர்கள் எந்த காரணத்திற்காக தன்னையும் தனது படத்தையும் எதிர்க்கின்றனர் என்பது வரை புட்டுப்புட்டு வைத்துள்ளார்.

இதையும் படிங்க: லியோவில் விஜய்க்கு பதில் அஜித்!.. அடக்கொடுமையே என்னடா இது விடாமுயற்சிக்கு வந்த வில்லங்கம்?..

குறிப்பாக தயாரிப்பாளர் தனஞ்செயன் நடிகர் ஜெய்யின் படத்தை ரிலீஸ் செய்ய தன்னிடம் உதவி கேட்டு வந்த நிலையில், இப்போதைக்கு தன்னால் அந்த படத்தை ரிலீஸ் செய்ய முடியாது என மறுத்துவிட்ட காரணத்தால் தான் இப்படி பொய்யான பேச்சுக்களை அவர் பேசி வருகிறார் என விளாசி எடுத்துள்ளார்.

மேலும், திருப்பூர் சுப்பிரமணியம் சொல்வதும் முழுக்க முழுக்க பொய் என்றும் 80% ஷேர் எந்தத் தியேட்டரிலும் கேட்கவில்லை என்றும் விளக்கம் கொடுத்துள்ளார்.

google news
Continue Reading

More in Cinema News

To Top