விக்ரமால காசு போச்சி!.. விக்ரம் பிரபுவால காசு வந்துச்சி!.. சிறை புரடியூசர் செம ஹேப்பி!…

Published on: January 22, 2026

2018ம் முதல் கோலிவுட்டில் தொடர்ந்து திரைப்படங்களை தயாரித்து வருபவர் லலித் குமார். சசிக்குமார் நடித்த அசுரவதம் திரைப்படம்தான் இவர் தயாரித்த முதல் திரைப்படம். அதன்பின் சர்பத், துக்ளக் தர்பார், மகான், காத்து வாக்குல ரெண்டு காதல், கோப்ரா, லியோ ஆகிய படங்களை தயாரித்திருக்கிறார்.

இவரின் தயாரிப்பில் அதிக பட்ஜெட்டில் உருவான படங்கள் என்றால் அது விக்ரம் நடித்த கோப்ரா மற்றும் விஜய் நடித்த லியோ ஆகிய 2 படங்களை சொல்லலாம்.
இதில் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடித்த கோப்ரா திரைப்படம் சொன்ன பட்ஜெட்டை விட பல கோடி பட்ஜெட்டுகள் அதிகமானது. மேலும் இந்த படத்தில் சியான் விக்ரம் பல கெட்டப்புகளில் வந்தார் விக்ரம். ஆனால் படம் வெளியாகி ரசிகர்களுக்கு பிடிக்காமல் படுதோல்வி அடைந்து லலித்குமாருக்கு நஷ்டத்தை கொடுத்தது.

இந்நிலையில்தான் தனது மகன் அக்ஷய்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவைத்து வெறும் 6 கோடி பட்ஜெட்டில் சிறை என்கிற திரைப்படத்தை தயாரித்தார் லலித்குமார். இந்த படத்தில் விக்ரம் பிரபு காவல் அதிகாரியாக நடித்திருந்தார். கடந்த வருடத்தின் இறுதியில் வெளியான சிறை திரைப்படம் நல்ல விமர்சனங்களை பெற்றதோடு நல்ல வசூலையும் பெற்றது.

6 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த திரைப்படம் உலக அளவில் 31.58 கோடி வசூல் செய்திருக்கிறது. இதை எடுத்து லலித்குமாருக்கு விக்ரமால் காசு போச்சு.. விக்ரம் பிரபுவால் காசு வந்துச்சு என கோலிவுட் வட்டாரங்களில் சொல்கிறார்கள். ரைமிங் நன்றாக இருந்தாலும் சிறை படம் ஓடியதற்கு காரணம் அந்த படத்தில் கதை மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.