டஜன் கணக்கில் கண்டிஷன் போடும் காதலர்.... டார்ச்சர் செய்யும் பெற்றோர். சிக்கலில் நடிகை....!

by ராம் சுதன் |
gossip news
X

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்த அந்த பிரியமான நடிகையின் திரைப்பயணம் என்னவோ பிரகாசமாக தான் இருந்தது. எடுத்த எடுப்பிலேயே நடிகைக்கு பட வாய்ப்புகள் குவிய தொடங்கியது.

அடுத்தடுத்து டாப் ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்த பிரியமான நடிகை டாப் நடிகைகள் பட்டியலில் முதல் இடம் பிடித்து விடலாம் என்ற கனவோடு மிகவும் பிசியாக பல படங்களில் நடித்து வந்தார். ஆனால் சமீபகாலமாக அந்த நடிகையின் மார்க்கெட் டல் அடிப்பதாக பேச்சு அடிபடுகிறது.

காரணம் அந்த நடிகையின் காதலர் தான். அதாவது நடிகை கல்லூரி நாட்களில் இருந்தே ஒருவரை மிகவும் சின்சியராக காதலித்து வருகிறார். இந்நிலையில் தற்போது நடிகையின் காதலர் ரொம்ப கிளாமராக நடிக்கக் கூடாது என டஜன் கணக்கில் கண்டிஷன்களை போட்டுள்ளாராம்.

அதுமட்டுமின்றி நடிகையை ஒப்பந்தம் செய்ய வரும் தயாரிப்பாளர்களிடம் நடிகையும் நான் இப்படி நடிக்க மாட்டேன், அப்படி நடிக்க மாட்டேன் ஹோம்லி ரோல் இருந்தால் கொடுங்கள் என்பதுபோல் ஏகப்பட்ட கண்டிஷன் போடுகிறாராம். இதனால் அவரை தேடி வந்த ஒரு சில வாய்ப்புகளும் தற்போது கைநழுவி போய்விட்டதாம்.

இதுதவிர என்னதான் நடிகை நன்றாக நடித்தாலும் அவரிடம் வெரைட்டியான நடிப்பு இல்லை என பலரும் கூறுகிறார்களாம். மேலும் நடிகையின் வீட்டிலும் திருமணம் செய்து கொள்ளுமாறு தொடர்ந்து டார்ச்சர் கொடுத்து வருவதால், சினிமா தனக்கு செட்டாகாது என்பதை புரிந்து கொண்ட நடிகை மீண்டும் பழையபடி சீரியலுக்கே திரும்பி விடலாமா? என்ற முடிவில் இருப்பதாக கூறப்படுகிறது.

Next Story