நடிகை ரேகா பாரதிராஜாவின் இயக்கத்தில் ‘கடலோர கவிதைகள்‘ படம் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமானார். சின்னப்பதாஸ் என்ற ரவுடி கேரக்டரில், சத்யராஜ் இதில் ஹீரோவாக நடித்திருந்தார். ரேகா டீச்சராக நடித்திருந்தார். இந்த படம் தமிழ் சினிமா வரலாற்றில் முக்கிய வெற்றி படமாக அமைந்தது. இந்த படத்தின் பாடல்கள் இப்போதும் வெகுவாக ரசிக்கப்படுகின்றன.
முதல் படத்திலேயே ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த ரேகா தொடர்ந்து தமிழில் பல படங்களில் நடித்தார். புன்னகை மன்னன் என் புருஷன்தான் எனக்கு மட்டும்தான் புரியாத புதிர் என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு பிள்ளைக்காக கதாநாயகன் குணா உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். எங்க ஊரு பாட்டுக்காரன் .உள்பட ராமராஜனுடன் ரேகா நடித்த பல படங்களில் கிராமத்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன.
கதாநாயகியாக நடித்த ரேகா ஒரு கட்டத்துக்கு பிறகு அக்கா அண்ணி அம்மா கேரக்டர்களில் நடிக்க துவங்கினார். காரணம் வயதும் அதற்கேற்ப அவரது தோற்றத்தில் ஏற்பட்ட முதிர்ச்சியும்தான். இரண்டு ஆண்டுகளுக்கு முன் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் ரேகா கலந்துகொண்டார். இப்போதும் ரேகா தமிழில் சில படங்களில் நடித்து வருகிறார். தன் தந்தை மீது அபரிதமான அன்பு கொண்ட ரேகா அவரது சமாதிக்கு அருகில் தனக்கும் சமாதி கட்டி பராமரித்து வருவது சமீபத்தில் வைரலானது குறிப்பிடத்தக்கது.
கடந்த 1970ம் ஆண்டில் பிறந்த ரேகாவுக்கு இப்போது 53 வயதாகிறது. இப்போது இவருக்கு கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. மாலதி நாராயணன் என்ற புதுமுக இயக்குநர் இயக்கத்தில் ‘மிரியம்மா’ என்ற படத்தில்தான் ரேகா கதாநாயகியாக நடிக்கிறார். இவருடன் எழில் துரை சினேகா குமார் அனிதா சம்பத் விஜே ஆஷிக் போன்றவர்களும் நடிக்கின்றனர்.
பெண்களை மையப்படுத்தி எடுக்கப்படும் இந்த கதையில் நாயகியாக நடிக்கிறாராம் ரேகா. இதன் படத்துவக்க விழா சென்னையில் நடந்துள்ளது.
நயன்தாரா ஐஸ்வர்யா ராஜேஷ் கீர்த்தி சுரேஷ் போன்ற முன்னணி நாயகிகள் இப்படி கதையின் நாயகிகளாக நடிக்கும் நிலையில் 53 வயதான ரேகாவும், அவர்களில் ஒருவராக களத்தில் இறங்கி இருப்பது ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. இந்த வயதில் இப்படி ஒரு அதிர்ஷ்டம் ரேகாவுக்கு அடித்திருக்கிறதே, என ரசிகர்கள் ஒரு தரப்பினர் ஆச்சரியப்படவும் செய்கின்றனர்.
'ஒண்ணே ஒண்ணு…
டைட்டிலைப் பார்த்ததுமே…
Kollywood: கோலிவுட்டை…
தனுஷ் இயக்கத்தில்…
Sivakarthikeyan: விஜய்…