டெஸ்ட் போட்டிகளில் இங்கிலாந்து அணி 5 லட்சம் ரன்களைக் கடந்து புதிய யாரும் தொட முடியாத உயரத்தில் உள்ளது.
கிரிக்கெட் எனும் விளையாட்டைக் கண்டுபிடித்து தனது காலணி நாடுகளில் அதை பரப்பினர் ஆங்கிலேயர்கள். 1739 முதல் கிரிக்கெட் போட்டிகள் ஆங்கிலேயர்களால் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கிரிக்கெட்டின் பிறப்பிடமான இங்கிலாந்து அணி புதிய மைல்கல் சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளது. இங்கிலாந்தில் சர்வதேசப் போட்டிகள் 1877 ஆம் ஆண்டு முதல் நடந்து வருகின்றன. கிரிக்கெட் சில பத்தாண்டுகள் வரை இங்கிலாந்தும் ஆஸ்திரேலியாவும் மட்டுமே அதில் விளையாடி வந்தன. இப்போது இதுவரை 13 அணிகள் டெஸ்ட் போட்டிகள் விளையாடும் தகுதியைப் பெற்றுள்ளன.
ஆனால் எல்லா அணிகளுக்கும் சீனியர் அணியாக இங்கிலாந்து உள்ளது. இதுவரை இங்கிலாந்து அணி 1022 போட்டிகளில் விளையாடியுள்ளது. மேலும் அந்த அணி 5 லட்சம் ரன்கள் என்ற மைல்கல்லை கடந்துள்ளது. அதற்கடுத்த இடத்தில் ஆஸ்திரேலியா 830 போட்டிகளிலும் மூன்றாவது இடத்தில் இந்தியா 520 போட்டிகளிலும் விளையாடியுள்ளது குறிப்பிடத்தக்கது. இங்கிலாந்து அடுத்தபடியாக உள்ள ஆஸ்திரேலிய அணி இங்கிலாந்தை விட 70,000 ரன்கள் கம்மியாக உள்ளது.
சிவகார்த்திகேயனைப் பொருத்த…
கங்குவா படத்தின்…
இயக்குனர் ஆர்.வி.உதயகுமார்…
தமிழ் சினிமாவில்…
நடிகர் தனுஷ்…