More

சிறுநீர் கழிக்க சென்ற சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் – 11 ஆம் வகுப்பு மாணவர் கைது !

திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 6 வயது சிறுமி ஒருவரை 11 ஆம் வகுப்பு மாணவர் பாலியல் வல்லுறவு செய்த சம்பவம் அதிர்ச்சியைக் கிளப்பியுள்ளது.

Advertising
Advertising

திண்டுக்கல் மாவட்டம் அருகே வேடச்சந்தூர் எனும் கிராமம் உள்ளது. இவர் நேற்று முன்தினம் மாலை சிறுநீர் கழிப்பதற்காக வெளியே சென்றுள்ளார். ஆனால் வெகுநேரமாகியும் அவர் திரும்பி வரவில்லை. இதனால் பயந்த பெற்றோர் அவரைத் தேடியுள்ளனர். அப்போது அங்கு நின்றுகொண்டிருந்த டிராக்டர் ஒன்றில் பலத்த காயங்களுடன் சிறுமி பலத்த காயங்களுடன் கிடந்துள்ளார்.

அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற பெற்றோர், அங்கு அவர் இறந்து விட்டதாக மருத்துவர்கள் சொன்னதைக் கேட்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். மேலும் இறப்பதற்கு முன்னர் அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாகவும் சொல்லியுள்ளனர். பிரேத பரிசோதனையிலும் அது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து சிறுமியின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க சொல்லி சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதையடுத்து போலீஸார் விசாரணை நடத்தி அதே பகுதியைச் சேர்ந்த 11-ம் வகுப்பு மாணவர் ஒருவரைக் கைது செய்துள்ளனர். அவரிடம் நடத்திய விசாரணையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பின் சிறுமியை அவர் டிராக்டரில் ஏற்று சென்றதாகவும் அப்போது அவர் கீழே விழுந்து இறந்ததாகவும் சொல்லியுள்ளார். இந்த சம்பவமானது திண்டுக்கல்லில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Published by
adminram

Recent Posts