அரியலூர் மாவட்டம் ஆண்டிமடத்திற்கு அருகே உள்ள சிட்டி யூனியன் வங்கியில் வாடிக்கையாளரின் கணக்கில் இருந்து 1.5 கோடி ரூபாயை மேலாளர் திருடியது கண்டுபிடிக்கப்பட்டது.
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணத்தை சேர்ந்தவர் மருதை. ஹார்டுவேர் கடை வைத்திருக்கும் இவர் தொழிலை விரிவு படுத்துவதற்காக ஆண்டிமடம் அருகே உள்ள விளந்தை எனும் ஊரில் உள்ள சிட்டி யூனியன் வங்கியில் தனது வீடு மற்றும் நிலம் ஆகியவற்றை அடமானமாக வைத்து 2 கோடியே 10 லட்சம் ரூபாயை கடனாகப் பெற்றதாக கூறப்படுகின்றது.
இந்த கடன் தொகை அவருக்கு 3 தவணைகளாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த 3 மாதங்களில் அவரது வங்கி கணக்கில் இருந்து ஒரு கோடியே 30 லட்சம் ரூபாய் காணாமல் போயுள்ளது. அவருக்கு எந்த வொரு செய்தியும் அனுப்பாமல், ரசீது, காசோலை என எந்த விதமான நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் அந்த தொகை எடுக்கப்பட்டதை அடுத்து அவர் வங்கிக்கு சென்று கேட்டபோது வங்கி மேலாளரும் மருதைக்கு கடன் வாங்க உதவி செய்த அவரது நண்பருமான வீரவேல் ஆகிய இருவரும் சேர்ந்து பணத்தை கையாடல் செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து மருதை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இது சம்மந்தமான வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
VijayTV: விஜய்…
Rashmika: புஷ்பா…
இயக்குனர் ஷங்கர்…
எம்ஜிஆருக்கு அடுத்தபடியாக…
அரை நூற்றாண்டுகளாகத்…