
அசுரன் படத்திற்கு பின்னர் இந்த படத்தை இயக்கவிருக்கும் வெற்றிமாறன் இந்த படத்திற்காக 150 அறைகள் கொண்ட ஒரு வீட்டை தமிழகம் முழுவதும் தேடி பார்த்தாராம். ஆனால் தமிழகம் மட்டுமின்றி இந்தியாவிலேயே 150 அறைகள் கொண்ட அவர் எதிர்பார்த்த வீடு இல்லை என்பதை உறுதி செய்த பின் தற்போது வெளிநாட்டில் இந்த பிரமாண்டமான வீட்டை செட் போட முடிவு செய்திருக்கிறாராம்
இந்த படத்தின் ஒருசில காட்சிகள் வெளிநாட்டில் படமாக்க வேண்டியதிருப்பதால் அந்த காட்சியையும் சேர்த்து படமாக்க அவர் திட்டமிட்டுள்ளார் இந்த படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் மாதம் தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது
இந்த நிலையில் 150 அறைகள் கொண்ட செட் போடும் பணியை கலை இயக்குனர் ஜாக்கி தொடங்கிவிட்டதாகவும் இன்னும் ஒரே மாதத்தில் இந்த வீடு தயாராகிவிடும் கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தில் சூரியை தவிர ஒரு முக்கிய பெரியவர் கேரக்டர் இருப்பதாகவும் அந்த கேரக்டரில் நடிக்க ஒரு சிலரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் அனேகமாக ராஜ்கிரண் இந்த கேரக்டரில் நடிக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தை ஒரே ஷெட்யூலில் முடிக்க வெற்றிமாறன் திட்டமிட்டிருப்பதாகவும் ஏப்ரல் மாதம் தொடங்கும் இந்தப் படப்பிடிப்பு மே மத்தியில் முடிந்துவிடும் என்றும் அதன் பின்னர் அவர் சூர்யாவின் படத்தை இயக்க தொடங்குவார் என்று கூறப்படுகிறது